சினிமா
பிக் பாஸ் வீட்டை உடைக்க இயக்குநர் அமீர் ஆவேசம்!

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இயக்குநர் சேரன் கலந்துகொண்டு தற்போது வரை நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாக பேசியுள்ள இயக்குநர் அமீர் பிக் பாஸ் ஸ்டுடியோவை உடைக்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.
சமீபத்தில் சேரன் மீது பிக் பாஸ் வீட்டில் மீரா மிதுன் வைத்த ஒரு குற்றச்சாட்டு சேரனின் அபிமானிகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த வாரம் மக்களே அவரை வெளியேற்றிவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் அமீர் அது தொடர்பாக பேசியுள்ளார்.
அப்போது, பிலிம்பேர் விருதுகள், தேசிய விருதுகள், மாநில விருதுகள் என்று பல விருதுகளை வாங்கு குவித்த சேரன் பிக்பாஸுக்கு சென்றார். போவதற்கு முன்னர் சொல்லிக்கொண்டு போனார். அந்த நேரத்தில் என்ன சொல்வது. சரி, என்று சொல்லிவிட்டேன். அந்த நிகழ்ச்சியில், ஒரு பெண் தன்னை கையை பிடித்து இழுத்துவிட்டதாக புகார் கூறுவதையும், அதற்காக மனம் நொந்து, நான் எதற்காக இங்கே வந்தேன், என் பிள்ளைகளுக்காகத்தான் வந்தேன், என்று அழுதபோது எனக்கு வேதனையாக இருந்தது.
அப்போது எனக்கு வந்த ஆத்திரத்திற்கு நேரே அந்த ஸ்டூடியோவுக்கு சென்று உடைத்துக்கொண்டு போய் சேரனை தூக்கிட்டு வந்திடலாம் என்று தோணுது. சமூகம் அவருக்கு கொடுத்திருக்கும் இடம் சாதாரணமானது கிடையாது. ஒரு முதல்வரை கடத்திக்கொண்டு போய் விவசாயம் பார்க்க வைத்ததாக தமிழ்சினிமாவில் வந்த முதல் கதை தேசியகீதம் படம்தான். அப்படிப்பட்ட இயக்குநர் இப்படிப்போய் உட்கார்ந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவருக்கு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு. சினிமாவில் புகழ் வெளிச்சம், எதுவும் நிரந்தமில்லை என்றார் அமீர்.

















