சினிமா செய்திகள்
அஜய்தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

இந்திய கால்பந்தாட்ட வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் அஜய்தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
சர்கார் படத்திற்கு பின்னர், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க, ஈஸ்வர் கார்த்திக் இயக்கும் புதிய படம் ஒன்றில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மகாநடி படத்திற்காக தேசிய விருது வாங்கிய கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைக்க, சட்டென மும்பைக்கு பறந்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.
கால்பந்து வீரரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நாயகன் அஜய்தேவ்கனுக்கு மனைவியாக நடிக்கிறார் என்ற அப்டேட் கிடைத்துள்ளது. மீண்டும் அடுத்த தேசிய விருது வாங்குவதற்கு தயாராகி வருகிறார், கீர்த்தி சுரேஷ்.











