சினிமா செய்திகள்
தொடர்ந்து வெற்றி படங்களை தரும் ஜெயம் ரவி!

நடிப்பிற்கு பெயர்போன ஜெயம் ரவி தன் அசத்தலான கதை தேர்ந்தெடுக்கும் திறமை மூலமாக தொடர்ந்து வெற்றி படங்களை தந்து வருகிறார்.
ஒரு கதையை கேட்டதும் இந்த கதைக்கு நாம் சரியாக இருப்போமா என்று யோசிக்காமல் பட வாய்ப்பு கிடைத்தால் போதும் என நினைக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில். சரியான கதையை தேர்வு செய்வதின் மூலம் மக்கள் மனதில் நீங்காது இடம் பிடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.
தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த டிக் டிக் டிக், அடங்கமறு, கோமாளி ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியான நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. சுதந்திர தினத்தன்று வெளிவந்த கோமாளி திரைப்படம் ஒரு புதுமையான கதைக்களத்துடன் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
மேலும், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் வசூலை சென்னை அளவில் முந்தி முதலிடம் பிடித்துள்ளது.
நல்ல கதைகளை தேர்வு செய்வதின் மூலம் மேலும் பல வெற்றி படங்களை ஜெயம் ரவி கொடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

















