தமிழ்நாடு
தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என அதிரடி தீர்ப்பு!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசதுரோக வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இதில் வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதில் அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு வருடம் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. இதில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் வைகோ குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தண்டனையை இன்றே வழங்குமாறு வைகோ கோரிக்கை வைத்தார். அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.

















