இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.11.2026

- கடந்த ஆண்டில் ஐரோப்பாவில் ரஷ்யாவின் நாசவேலைத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. தற்போது, இத்தகைய தாக்குதல் பல உயிரிழப்புகளுடன் ஒரு பேரழிவில் முடியக்கூடும் என்று ஒரு முன்னணி சிந்தனைக் குழு எச்சரிக்கிறது.
- “ஹாலிவுட்டில் பார்த்த தீமைகளைக் காட்டிலும் காஸாவில் நடப்பவை கொடூரமானவை!” – தி ராக் அதிரடிக் கருத்து!
- மாலை 5 மணிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகளின் மேற்பார்வையில் திருப்பரங்குன்றம் மலையில் சர்ச்சைக்குரிய தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.
- உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் இன்று (நவம்பர் 28) கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
- இன்று தங்கம் விலை குறைந்தது! 28/11/2026 – சென்னை தங்கம் விலை 22K – 1 கிராம் : ₹11,720 (-₹50 குறைவு) 22K – 8 கிராம் : ₹93,760 24K – 1 கிராம் : ₹12,785 24K – 8 கிராம் : ₹1,02,280 வெள்ளி – 1 கிராம் : ₹170.00
- பாலஸ்தீன மக்களுக்கும் காசாவுக்கும் தனது ஆதரவைத் தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என துனிசிய டென்னிஸ் நட்சத்திரம் ஒன்ஸ் ஜபியூர் தெரிவித்துள்ளார்.


