Uncategorized
உங்க உடம்பில் மைக்ரோசிப் பொருத்திக் கொள்ள ரெடியா? எல்லா வேலைகளையும் ஈசியா செய்ய முடியும்

நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பம் கொஞ்சம் கொஞ்சமாக நம் உடலுக்குள்ளேயே நுழையத் தொடங்கிவிட்டது!
தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை எளிதாக்கலாம். ஆனால் எந்தப் புதிய கண்டுபிடிப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் நன்மைகளையும் ஆபத்துகளையும் புரிந்துகொள்வது அவசியம்.
இனி கையில் சாவியும் தேவைப்படாது… கார்டும் தேவைப்படாது
உங்கள் உடலில் நீங்கள் பொருத்திக் கொள்ளத் தயாராகும் ஒரு சிப் உங்களின் பல்வேறு வேலைகளை செய்ய இருக்கிறது. போன் தேவை இல்லை. ஐடி கார்டு தேவை இல்லை. சாவி தேவை இல்லை. பயண அட்டை தேவை இல்லை. டெபிட் கார்டு, கிரெடிட்கார்டு ஆகியனவும் தேவைப்படாது. டிவிக்கு ஏசிக்கு எதற்கும் ரிமோட்டும் தேவைப்படாது. ஸ்கேனரும் தெவை இல்லை. காதில் ஹெட்போன் மட்டும் மாட்டிக் கொண்டு நீங்கள் ஹாயாக இருக்கலாம்.
பிரபலமாகும் மனித உடலுக்குள் மைக்ரோசிப் தொழில்நுட்பம்!
ஸ்வீடன் நாட்டில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய கையில் மிகச் சிறிய மைக்ரோசிப்களைப் பொருத்திக் கொண்டுள்ளனர்.
இந்த சிப் எப்படி வேலை செய்கிறது?
ஒரு அரிசி அளவுக்கு நெருக்கமான சிறிய சிப் கையின் தோலுக்கு அடியில் பொருத்தப்படுகிறது. இது NFC அல்லது RFID தொழில்நுட்பத்தின் மூலம் தகவல்களைப் பரிமாறுகிறது. பொருத்தமான ஸ்கேனருக்கு அருகில் கையைக் காட்டினால் கதவுகளைத் திறக்கவும், அடையாளத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
சில இடங்களில் அலுவலக அடையாள அட்டை மற்றும் பயண அட்டைகளுக்கான மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இதன் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?
இந்தச் சிப்களில் பொதுவாக பேட்டரி அல்லது GPS கிடையாது. அருகிலுள்ள ரீடரிலிருந்து கிடைக்கும் மின்காந்த ஆற்றலைப் பயன்படுத்தி செயல்படுகின்றன.
ஆனால் இவை முழுமையான பாதுகாப்பை வழங்கும் என்று சொல்ல முடியாது. தகவல் பாதுகாப்பு, தனியுரிமை, மருத்துவப் பாதுகாப்பு போன்ற பல்வேறு கேள்விகளும் இதில் உள்ளன.
**இது எதிர்காலத்தின் புதிய வசதியா? அல்லது நாம் கவனமாக அணுக வேண்டிய தொழில்நுட்பமா?**
தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை எளிதாக்கலாம். ஆனால் எந்தப் புதிய கண்டுபிடிப்பையும் பயன்படுத்துவதற்கு முன்பு அதன் நன்மைகளையும் ஆபத்துகளையும் புரிந்துகொள்வது அவசியம்.
ஆனால் இந்த தொழில் நுட்பம் வெளியில் இருக்கும் மூன்றாவது நபர் அல்லது உங்களின் எஜமானர்களால் கட்டுப்படுத்தப்படக் கூடியதாக இருக்கப் போகிறது என்பதை நினைத்தால் சற்று பதற்றமாகவும் இருக்கிறது.

