இந்தியா
இரவுச் செய்திகள் – 11.11.2026

- அரசியல் பேச்சுகள் தொடர்பாக குற்றவியல் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கக் கோரி வழக்கு: தமிழக டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
- சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் அச்சுறுத்தல் 8 நாடுகளில் வேகமாக பரவிய புதிய ‘பிஜே21’ வைரஸ்; தடுப்பூசிக்கு கட்டுப்படுவதாக நிபுணர்கள் தகவல்
- தூய்மை கணக்கெடுப்பு 2025-26 ஆய்வில் தமிழ்நாட்டின் முதல் தூய்மையான நகரமாக தேனி அல்லி நகரம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கவுரவித்தார்.
- தாத்தாவின் பரம்பரை சொத்தில் பாகப்பிரிவினைக்குப் பிறகு தந்தைக்கு ஒதுக்கப்பட்ட சொத்து அவரது தனிப்பட்ட சொத்தாக மாறுவதாகவும் அத்தகைய சொத்தில் பேரன் உரிமை கோர முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
- பிச்சைக்காரன் மூன்றாம் பாகத்துக்கான அப்டேட் கொடுத்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி. படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விட்டதாகவம் அடுத்த ஆண்டு ஆயுதபூஜைக்கு வெளியிடப்படும் எனவும் தகவல்.
- தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், தவறான வழியில் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் விஜய் எச்சரித்ததாகத் தகவல்! மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் எம்.எல்.ஏக்களுக்கு அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
- இஸ்ரோவின் ஆதித்யா-L1 விண்கலம் சூரியனைத் தொடர்ந்து ஆய்வு செய்து, சூரிய வெடிப்புகள் மற்றும் விண்வெளி வானிலை குறித்த முக்கியத் தரவுகளைச் சேகரித்து வருகிறது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ள ஆதித்யா-L1 திட்டம், விஞ்ஞானிகளுக்கு புதிய ஆய்வுத் தகவல்களை வழங்கி வருகிறது.


