இந்தியா
இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

ஆன்லைனில் வீடியோ பார்ப்பது, பாடல் கேட்பது மட்டுமல்ல… எதிர்காலத்தில் காபி மற்றும் பழரசங்கள் போன்றவற்றின் வாசனையையும் தொலைதூரத்தில் உணர முடியும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஓஹியோ மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவின் Zhejiang Laboratory ஆராய்ச்சியாளர்கள் இணைந்து Scentronic என்ற செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தக் கருவியில் உள்ள 6 வாயு உணரிகள், ஒரு வாசனையுடன் தொடர்புடைய வேதிப்பொருள் அமைப்புகளைக் கண்டறிகின்றன. பின்னர் AI அந்த வாசனையை அடையாளம் கண்டு, அதற்கான டிஜிட்டல் தரவுகளை இணையம் வழியாக மற்றொரு கருவிக்கு அனுப்புகிறது. அங்குள்ள கருவி, தன்னிடம் இருக்கும் வாசனை தொடர்பான விவரங்களை பகுப்பாய்வு செய்து அதற்கு நெருக்கமான வாசனையை உருவாக்குகிறது.
தற்போது எந்தெந்த வாசனைகளை உருவாக்க முடியும்?
காபி, பீர், சிவப்பு ஒயின், கேக், ஆரஞ்சு
14 தன்னார்வலர்கள் அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், தனித்தனி வாசனைகளை சுமார் 73% நேரங்களில் சரியாக அடையாளம் கண்டுள்ளனர். இரண்டு வாசனைகள் கலந்திருந்த சோதனைகளில் இந்த வெற்றி விகிதம் சுமார் 71% ஆக இருந்தது.
இந்தத் தொழில்நுட்பம் உண்மையான வாசனை மூலக்கூறுகளை இணையம் வழியாக அனுப்புவதில்லை. டிஜிட்டல் தகவல்களை அனுப்பி, மறுபுறத்தில் உள்ள கருவி மூலம் வாசனையை மீண்டும் உருவாக்குகிறது. எல்லா வகையான வாசனைகளையும் துல்லியமாக உருவாக்கும் நிலையை இது இன்னும் அடையவில்லை.
வருங்காலங்களில் என்னவெல்லாம் சாத்தியம்?
ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களின் வாசனையை உணர்வது, வீடியோ அழைப்புகளில் வாசனையை அனுபவிப்பது, Virtual Reality அனுபவங்களை மேலும் இயல்பாக்குவது போன்ற பயன்பாடுகளுக்கு இந்த ஆராய்ச்சி எதிர்காலத்தில் உதவக்கூடும். சினிமா தியே்ட்டர்களில் படம் பார்கும்போதும் இந்த அனுபவங்களை நாம் உணரக்கூடிய காலம் விரைவில் கனியும்.

