இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.09.2026

- முடிந்தது கெடு!” “எங்களது நாடு தழுவிய போராட்டம் அக்.2ம் தேதி மும்பையில் தொடங்குகிறது” என அறிவிப்பு. CJP நிறுவனர் தலைமை தேர்தல் ஆணையர் திரு.ஞானேஷ்குமாரின் 48 மணி நேர பதவி விலகல் கோரிக்கையைத் தொடர்ந்து, அக்.2 முதல் நாடு தழுவிய போராட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கூட்டுறவு துறையில் பொதுமக்கள் பணியாளர்கள் புகார்களை தெரிவிக்க 9884000845 என்ற வாட்சப் எண்ணில் குறைதீர்வு வசதி. பெறப்படும் புகார்கள் e Office வழியாக சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
- தொலைதொடர்பு நிறுவனங்கள் 28 நாள் மொபைல் ரீசார்ஜ்க்கு பதிலாக இனி கட்டாயமாக 30 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் வழங்க வேண்டும். இதனால் ஆண்டக்கு 13 ரீவார்ஜ்களுக்கு பதிலாக இனி 12 ரீசார்ஜ்களே பொதும்.நெட் தேவை இல்லாதவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் குரல் ஃ எஸ்எம்எஸ் பிளான்கள் வழங்க வேண்டும். ஒரே தேதியில் மாதாந்திர ரீசார்ஜ் புதுப்பிக்கம் வசதியையும் வழங்க வேண்டும். – டிராய் வெளியிட்டுள்ள புதிய தொலைதொடர்பு நுகர்வோர் பாதுகாப்ப விதிமுறைகள்
- RTI சட்டத்தில் சட்டம் ஒழுங்குக்கு விலக்கு அளித்ததை வாபஸ் பெற்றது தமிழக அரசு. கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, சட்டம் ஒழுங்கு தொடர்பான தகவல்களுக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கு திரும்பப் பெறப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
- ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியாவுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சர் ஆதரவு
- இன்று தொடங்க இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. ஆலோசனையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஐக்கிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.
- ஏசி, டிவி, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் விலையை அக்டோபர் 1ம் தேதி முதல் 5-8 விழுக்காடு வரை உயர்த்த நிறுவனங்கள் முடிவு எனத் தகவல்.
- அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் விஜய்.


