கட்டுரைகள்
பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

நாம எவ்வளவோ போராட்டத்துக்கிடையில் இரவு பகலாக உழைத்து குருவி சேர்க்கிறார் போல் சேர்த்து சொத்துக்களை வாங்குவோம். நமக்கு வயதான உடனே அந்த சொத்துக்களை மனைவி பெயரிலோ அல்லது பிள்ளைகளின் பெயரிலோதான் எழுதுவோம். அவற்றின் வளர்ச்சி அதிலிருந்து கிடைக்கும் லாபம் ஆகியவையே நமக்கு பெரிய விஷயமாகத் தெரியும்.
ஆனால் பெரிதாக சம்பாதிக்கும் மிகப் பெரும் தொழிலதிபர்கள் சினிமா நடிகர்கள் மற்றும் பெரும்புள்ளிகள் எல்லாம் இவ்வாறு செய்வதில்லை. வேறு என்ன செய்கிறார்கள் தெரியமா?
இதுபோன்ற பெரும் புள்ளிகள் எல்லாம் தாங்கள் சொத்துக்கள் சம்பாதிக்கும்போது அவற்றை ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து வைத்து பொதுக்காரியங்களில் ஈடுபடுவதாக ஒரு என்ஜிஓ அமைப்பு போல அதன் பேரில் அந்த சொத்துக்களை எழுதி வைத்து விடுவார்கள். அந்த டிரஸ்ட்களுக்கு வரும் நன்கொடைகள் அவர்கள் செய்யும் பொதுத்தொண்டுகளுக்கு அரசு கொடுக்கக்கூடிய மானியம் மற்றும் சந்தைவிலை ஏற்றம் என பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அவற்றின் மதிப்ப உயர்ந்து கொண்டேதானிருக்கும். குறைவதற்கு வாய்ப்பில்லை.
அவர்கள் பெற்ற பிள்ளைகளை அந்த டிரஸ்டின் பயனாளிகளாக (Beneficiary) ஆக சேர்த்து விடுவார்கள். அந்த பிள்ளைகள் அந்த சொத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது வாடகைக்கு விடலாம். அங்கேயே தங்கிக் கொள்ளலாம் சொத்தின் மூலம் வரும் பயன்களை எவ்வளவு வேண்டுமானாலும் அனுபவித்துக் கொள்ளலாம்.. ஆனால் அவற்றில் கைவைக்க முடியாது. இதனால்தாங்க பெரும் பணக்கார்ர்கள் எப்போதும் பணக்காரர்காகவே இருந்து வருகிறார்கள்.இப்ப தெரியுதுங்களா?
இதன் மூலம் கிடைக்கும் மூன்று முக்கிய பலன்கள் என்ன என்று தெரியுமா? தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.
முதலாவதாக, Divorce Protection – பிற்காலத்தில் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் குடும்பத் தகராறு மற்றும் விவாகரத்து கோருதல் போன்ற சட்ட சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் எதிர்த் தரப்பினால் இந்த சொத்துக்களின் மீது எந்த உரிமையும் கோர முடியாது. நீதிமன்றங்களாலும் அவற்றின் மீது எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள இயலாது. ஏனென்றால் அந்த சொத்து அவர்கள் பேரில் இல்லை.
இரண்டாவதாக, Bank Loan Immunity – வங்கிகளில் தனிப்பட்ட முறையில் பர்சனல் லோன் ஏதாவது வாங்கியிருந்து அதை அவர்கள் கட்டாமல் விட்டிருந்தால் வங்கிகள் அந்த சொத்துக்கள் மீது எந்தவித சட்டபுர்வமான நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனென்றால் அந்த சொத்துக்கள் அவர்கள் பேரில் இல்லை.
மூன்றாவதாக, சூதாடிக்கூட அவர்களால் அந்த சொத்துக்களை விற்க முடியாது.
இப்ப தெரியதா? பணக்காரர்கள் ஏன் எப்பவுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் என்று.
சூர்யா, விஜய், உதயநிதி இவங்க எல்லோருமே அவங்க புள்ளைங்க பேர்ல எந்த சொத்தையும் எழுதி வைப்பதில்லை.
நீங்களும் சிந்திச்சு முடிவெடுங்க.











