சினிமா
திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

- மனித மனத்தின் சொல்லாத ஆசைகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’!
- ‘96’ கோவிந்த் வசந்தா இசையில் மனதை தொடும் ‘சின்ன சின்ன ஆசை’!
- காசியில் மலரும் மனித உணர்வுகளின் பயணம்! ஜூன் 19ல் திரைக்கு வரும் ‘சின்ன சின்ன ஆசை’

பாபுஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஏஜிஎஸ் சினிமாஸ் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.
காசி நகரில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் ஒரு ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் உணர்வுப்பூர்வமான தருணங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மலையாள நடிகர் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனிதர்களின் சொல்லப்படாத சின்னச் சின்ன ஆசைகளையும், நெகிழ்ச்சியான உணர்வுகளையும் மையமாகக் கொண்ட இந்த ஃபீல்-குட் திரைப்படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் யு சான்றிதழ் பெற்றுள்ளது.
மனதை வருடும் கதையும், உணர்வுகளை பேசும் திரைக்கதையும் கொண்ட ‘சின்ன சின்ன ஆசை’ ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.


















