வணிகம்
தீபாவளி 2026-ல் பட்டாசு விலை 25% உயருமா? உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Published
1 நாள் agoon
By
Poovizhi
2026-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விலைகள் கணிசமாக உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, டீசல் விலை அதிகரிப்பு மற்றும் லாரி போக்குவரத்து கட்டண உயர்வு போன்ற காரணங்களால் பட்டாசு விலை சுமார் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிவகாசியில் தற்போது தீபாவளி சீசனை முன்னிட்டு பட்டாசு உற்பத்திப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், உற்பத்தியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, அரையிறுதி விற்பனை காலத்தில் வட மாநிலங்களில் திருமண நிகழ்ச்சிகள் குறைவாக இருந்ததால், அங்குள்ள வியாபாரிகள் பட்டாசுகளை எதிர்பார்த்த அளவில் கொள்முதல் செய்யவில்லை. இதனால் கையிருப்பில் உள்ள பட்டாசு பொருட்களை விற்பனை செய்வதில் உற்பத்தியாளர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையில், மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கமாக பட்டாசு உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் உற்பத்திச் செலவு கணிசமாக உயர்ந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சரக்கு போக்குவரத்து கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மூலப்பொருட்கள் விலை உயர்வு, விற்பனை மந்தநிலை போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்த பட்டாசுத் தொழிலுக்கு, தற்போது லாரி வாடகை உயர்வும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, கடந்த 2025-ஆம் ஆண்டு தீபாவளியுடன் ஒப்பிடும்போது, 2026-ஆம் ஆண்டுக்கான தீபாவளி பட்டாசுகளின் விலை சுமார் 25 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆண்டு தீபாவளிக்காக பட்டாசுகள் வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் கூடுதல் செலவுக்கு தயாராக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.


















