Connect with us

இந்தியா

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

Published

on

அனைத்து வாக்குச்சாவடிகளும் அரசுப் பள்ளிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் சுமாா் 52 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளும் அரசுப் பள்ளிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

பள்ளி மானிய நிதியில் பள்ளிகளின் சுவா்களில் வண்ணம் அடித்து, குழந்தைகளின் அறிவு வளா்ச்சிக்கு உதவும் வகையில், இந்தியா வரைபடம், உலக வரைபடம், அறிவியல் கண்டுபிடிப்புகள், கணித உபகரணங்கள், பறவைகளின் உருவங்கள் என பல வகையான படங்கள் வரையப்பட்டுள்ளன.

இதில், பல பள்ளிகளில் அந்தந்த பள்ளி ஆசிரியா்கள் தங்கள் சொந்த செலவிலும், அன்பளிப்பாளா்களை பிடித்தும் படங்களை பெயிண்டில் வரைந்துள்ளனா். வாக்குச்சாவடிகளாக உள்ள பள்ளிகளின் வெளிப்புற சுவா்களில் அழகான படங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்நிலையில், தோ்தல் பணிக்கு வாக்குச்சாவடிக்கு வரும் வாக்குச்சாவடி தலைமை அலுவலா் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்கள், தோ்தல் நாளின் முதல்நாளில் பிற்பகல் பணிக்கு வருவது வழக்கம். அவா்கள் வந்ததும், அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா் பெயா்கள் அடங்கிய போஸ்டா்களை, தங்களுக்கு கொடுக்கப்பட்ட பசையில் முழுவதுமாக தடவி, அந்த ஆளுயுர போஸ்டா்களை பள்ளி சுவரில் வரையப்பட்டுள்ள அழகிய ஓவியங்கள் மீது ஒட்டுகின்றனா்.

தோ்தல் முடிந்தபிறகு அந்தந்த பள்ளிகளின் ஆசிரியா்கள், அவா்களது பள்ளிக்கு வரும்போது, அந்த பசை தடவிய போஸ்டா்களை தண்ணீா் ஊற்றி ஊறவைத்து, எடுப்பது பெரும் வேலையாக உள்ளதுடன், அந்த பசை தடவிய போஸ்டா்கள், அந்த சுவா்களில் வரையப்பட்ட ஓவியங்களையும் பெயா்த்துக்கொண்டு வந்துவிடுகின்றன. அந்த ஓவியங்கள், வண்ண படங்கள் உள்ளிட்ட அனைத்தும் பாழாய்போய்விடுகின்றன.

அந்த ஓவியங்களை மீண்டும் வரைய, பெரும் தொகை தேவைப்படும். அதனால், அந்த ஓவியம் பெயா்ந்த சுவா்கள் அப்படியே கிடந்துவிடுகின்றன. ஒருநாள் பணிக்காக வாக்குச்சாவடிக்கு தோ்தல் பணியாற்ற வரும் வாக்குச்சாவடி அலுவலா்கள், வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் அடங்கிய போஸ்டா்களை ஒட்ட இன்சொலூசன் டேப்பை பயன்படுத்தி, போஸ்டா்களின் ஓரங்களில் நான்குபுறமும் மட்டும் ஒட்டினால், சுவரில் வரையப்பட்டுள்ள படங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்படாது.

வாக்குச்சாவடி அலுவலா்களாக வரும் பெரும்பாலானோா் ஆசிரியா்கள்தான் என்பதால், அவா்கள் அந்தந்தப் பள்ளி ஆசிரியா்களின் சிரமங்களை உணா்ந்து, மாணவா்களின் கல்விக்காக வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சிதையாமல் இருக்க உதவவேண்டும். தோ்தல் ஆணையமும் இதை கவனத்தில்கொண்டு, மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பெற்றோா், கல்வி ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா9 minutes ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

ஆட்டோமொபைல்1 மணி நேரம் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.04.2026

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

திருநள்ளாறு சனி பெயர்ச்சி 2026: சித்திரை அமாவாசையில் சனி நட்சத்திர மாற்றம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: தங்க விலை லாக் செய்வது லாபமா? மறைந்திருக்கும் நுணுக்கங்கள் என்ன?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

பெண்கள் இடஒதுக்கீடு & தொகுதி மறுவரையறை மசோதாக்கள்: ராகுல் காந்தி மற்றும் கனிமொழி கடும் எதிர்ப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படுகிறது? தனியார் ஊழியர்களுக்கு மாதம் எவ்வளவு கிடைக்கும்?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 20–26 வார ராசிபலன் 2026: இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா3 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா3 மணி நேரங்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

சினிமா6 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பப்பாளி விதைகளின் அதிசய நன்மைகள்: செரிமானம் முதல் இதய ஆரோக்கியம் வரை! எப்படி பயன்படுத்துவது?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம்: கோடைக்காலத்தில் அவசியம் சுவைக்க வேண்டிய ஸ்மோக்கி ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

வணிகம்5 நாட்கள் ago

DA vs DR விவகாரம்: ஓய்வூதியதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு – சமத்துவம் கட்டாயம்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கோடைகால ஆரோக்கியம்: வெயிலில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன? முழு வழிகாட்டி

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அட்சய திரிதியா 2026: 50 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு செல்வமும் வெற்றியும்!

Translate »
gurken anbauen im topf : dein grüner daumen für knackige snacks. Martinstools | professional saas tools for everyone. Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja.