இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.03.2026

- சைபர் குற்றங்களை தடுக்க, சமூக ஊடகங்கள், டேட்டிங் மற்றும் கேமிங் செயலிகளில் கணக்கு தொடங்குவதற்கு கட்டாய KYC மற்றும் வயது சரிபார்ப்பை நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை.
- நாட்டில் முதல் 15 பெட்டி மின்சார ரயில் தயாரிப்பு பணி நிறைவு. இதன் மூலம் பீக் அவர்களில் பயணிகள் நெரிசல் குறையும். இந்த ரயில் விரைவில் மும்பைக்க அனுப்ப்ப்ப்படும் என ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ( 6தனித் தொகுதிகள் மற்றும் 2 பொதுத் தொகுதிகள்) ஒதுக்கீடு.
- திமுக கூட்டணியில் காங்கிரஸ்-28, விசிக-8, சிபிஐ-5, சிபிஎம்-5, மதிமுக-4, இ.யு.மு.லீக்-2, கொமதேக-2 மற்றம் மமக-2 என 56 தொகுதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
- ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதி- ரூ.2 லட்சத்திற்கு மேல் முத்திரைத்தாள் வாங்க பான் எண் கட்டாயம். ரூ.1 லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்புகளில் முத்திரைத்தாள் வாங்குவொரின் விவரங்கள் ஸ்டாக் ஓல்டிங் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதோடு வருமானவரித்துறை பார்வைக்கு செல்லும் வகையில் விதியில் திருத்தம்.
- மீட்டர் டிமாண்ட் அதிகமாகி விட்டது 3 மாதங்களுக்கு மேல் துண்டிப்பில் உள்ள மின்இணைப்பு மீட்டர்கள் அகற்றபட்டால் அம் மறு இணைப்பு பெறுவது நுகர்வோருக்கு சிக்கலாகிவிடும் எனவே மின் கட்டணம் 3 மாதங்களுக்கு மேல் செலுத்தாது உள்ள நுகர்வோர் உடனே மின்கட்டணத்தை செலுத்தி விடவும்
- வரும் ஜீன் மாத்திற்குள்ளாக கைப்பேசி எண்ணைக் காண்பிக்காமல் USERNAME – ல் இயங்கும் வகையில் WHATSAPP-ஐ மேம்படுத்த META நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல். இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு அதிகரிப்பு. மற்றும் SPAM செய்திகள் குறையும் என நம்பிக்கை.
- அணு ஆயுதத் தயாரிப்பில் வடகொரியா தொடர்ந்து ஈடுபடும் என அந்த நாட்டின் அதிபர் கிம்ஜோங் உன் அதிரடியாக அறிவித்துள்ளார்.

















