இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 05.03.2026

- அமெரிக்காவின் அடுத்த இலக்கு இந்தியா. இந்த பிராந்தியத்தில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை பலமுடன் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. என ஈரானிய தலைவர் அப்துல் மஸ்ஜித் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
- தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளுக்கும், கல்வி நோக்கங்களுடன் தொடர்பில்லாத நிகழ்ச்சிகளை நடத்தவும் தமிழ்நாடு அரசு தடை விதிப்ப. – தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு.
- நிலங்கள் தொடர்பான பட்டா, நிலவரைபடம், “அ“ பதிவேடு விவரங்களை ஒருங்கிணைந்த முறையில் பெறவும், பட்டா மாறுதலில் முந்தைய விவரங்களை பெறுவதற்கான புதிய பட்டா வரலாறு என்ற வசதியும் இன்று முதல் அமலுக்கு வந்தன.
- பருவகால மாற்றம் காரணமாக சென்னையில் மெட்ராஸ்-ஐ பாதிப்பு வழக்கத்தைக்காட்டிலும் 20 சதவீதம் அதிகரிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை.
- திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் நாளை சனிப்பபெயர்ச்சி விழா
- திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தார். – இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்பு.
- சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் சிப்காட் புங்காவில் ரூ.5300 கோடி முதலீட்டில் டயர் உற்பத்தி ஆலை அமைக்கிறது எம்ஆர்எப் நிறுவனம். 1000 பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.
- ஸ்விக்கி மற்றும் சொமேட்டாவுக்கு போட்டியாக பைக் டாக்சி துறையில் முன்னணியில் உள்ள ரேபிடோ நிறுவனம் ஓன்லி (Ownly ) ன்ற பெயரில் உணவு டெலிவர் ஆப் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக பெங்களுரு நகரில் மட்டும் இந்த சேவை அமலுக்கு வந்துள்ளது.













