இந்தியா
பட்ஜெட்டில் எந்த வரிச்சலுகைகளால் யாருக்கு என்ன பயன்?

பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் எந்த ஒரு முடிவை எடுப்பதற்கும் சற்றுப் பொறுமையும் கூர்ந்தாய்வும் அவசியம்.
வரி குறைப்பும் வரி விலக்கும்
இந்தியாவில் கிளவுட் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு 2047 வரை வரிவிலக்கு
7 வகை அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கு வரிவிலக்கு
புற்றுநோய் சிகிச்சைக்கான 17 வகை மருந்துகளுக்கு வரிவிலக்கு
மின்சார வாகனங்களுக்கான லித்தியம் பேட்டரிக்கு வரி இல்லை.
காலணி தயாரிப்புக்கான மூலப்பொருட்களுக்கான வரிவிலக்கு
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்ப வரிவிலக்கு
இந்தியாவில் உள்ள டேட்டா மையங்களுக்கு 2047ம் ஆண்டு வரை வரி கிடையாது
சோலார் பேனல் கண்ணாடிகளை உற்பத்தி செய்ய பயன்படும் சோடியத்திற்கு முழு வரிவிலக்கு
லித்தியம் பேட்டரியில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பு இல்லை
இந்த வரி விலக்குகளால் லேப்டாப் மொபைல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்கள் காலணிகள் சோலார் பேனல்கள் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவை பெருமளவில் விலை குறைய வாய்ப்பு.
காலணிகள் ஏற்றுமதி செய்வோருக்கு மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வரி குறைப்பு
திண்டுக்கல் வேலூர் ராணிப்பெட்டை மாவட்டங்களில் தோல் தொழில் நசிவுற்று வரும் நிலையில் இந்த வரிவிதிப்பு அந்த துறையில் நல்ல பலன்களைக் கொடுத்து காலணிகளின் விலை குறைய வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
சாலைவிபத்தில் இறந்தவர்களுக்கு வழங்கப்படும் விபத்துக் காப்பீட்டுத் தொகைக்கு வரி கிடையாது
மரணத்தில் கூட வரி போட்டு வருமானம் பார்க்கிறது அரசு என்ற இழிசொல் நீங்கும் விதமாக அளிக்கப்பட்ட வரிவிலக்கு விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் அளிப்பதாக உள்ளது.











