Uncategorized
“Fan Death Syndrome” ஆ? அப்படின்னா என்ன?

மருத்துவர்கள் “Fan Death Syndrome” குறித்து தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர். முழு இரவும் ஃபேன் ஓடவிட்டு தூங்குவது சிலருக்கு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலை ஏற்படும்போது, அறையில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைய வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து காற்று சுழற்சி நடப்பதால் இயல்பான மூச்சு முறை பாதிக்கப்படுகிறது. இதனால் இதயம் மற்றும் ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகலாம். சூடான அறையில் கூட, நீண்ட நேரம் ஃபேன் காற்று நேரடியாக உடம்பில் பட்டால் உடல் வெப்பம் குறைந்து (Hypothermia) ஆபத்து ஏற்படலாம். இதுவே தூக்கத்தின் போது உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது.
தென் கொரியாவில், இரவில் ஃபேன் ஓடவிட்டு தூங்கிய பிறகு காலையில் காரணம் தெரியாமல் உயிரிழந்த பல சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த விஷயம் பெரும் கவனம் பெற்றது.
ஃபேன் காற்று நேரடியாக முகம் அல்லது உடம்பு மீது அடித்தால், நாம் வெளியே விடும் கார்பன் டைஆக்சைடு அதே இடத்தில் சுழன்று, புதிதாக ஆக்சிஜன் கிடைக்காமல் போகும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இதன் அறிகுறிகளாக காலையில் தலைவலி, மயக்கம், இதயத் துடிப்பு ஒழுங்கில்லாமல் இருப்பது போன்றவை சொல்லப்படுகின்றன. இந்த அறிகுறிகளை கவனிக்காமல் விடக் கூடாது.
மருத்துவர்கள் பாதுகாப்புக்காக சில ஆலோசனைகளையும் தருகிறார்கள். ஃபேன் குறைந்தது 6 அடி தூரத்தில் வைத்துப் பயன்படுத்த வேண்டும். நேரடியாக உடம்பு மீது காற்று அடிக்காமல், சுவரை நோக்கி திருப்பி வைப்பது நல்லது. மேலும், முழு இரவும் ஃபேன் ஓடாமல் இருக்க 2–3 மணி நேரத்திற்கு பிறகு ஆஃப் ஆகும் வகையில் டைமர் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இது உடலுக்கு ஏற்படும் ஆபத்துகளை குறைக்க உதவும்.
முதியவர்கள் மற்றும் ஏற்கனவே மூச்சு சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு ஆக்சிஜன் குறைவு எளிதில் பாதிப்பை உண்டாக்கலாம்.
நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு சாதாரண ஃபேன் தவறான முறையில் பயன்படுத்தினால் உடல்நல ஆபத்தாக மாறலாம். அதனால், சரியான விழிப்புணர்வுடன் பயன்படுத்தினால் தான் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும்.

















