செய்திகள்
மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.01.2026

- சீனா அளவுக்கு இந்தியா பொருளாதாரத்தில் இன்னும் வளரவில்லை. ஆனால் இந்தியாவில் சீனா அளவுக்கு ஒரு மாநிலம் வளர்ந்துள்ளது என்றால் அது தமிழ்நாடுதான். – ஒன்றிய முன்னால் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம்.
- வாழ்வில் நல்ல பாதையை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். உலகத்தோடு போட்டி போடுங்கள். அதற்காகத்தான் உங்கள் கையில் கணினி கொடுக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் ஜெயித்து வாருங்கள். நாங்களும் ஜெயித்து வருகிறோம். – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இன்று பிற்பகலில் தங்கம் மீண்டும் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து கிராம் ரூ.12760க்கும் சவரன் ரூ.102080க்கும் விற்பனை ஆகிறது.
- இன்ற பிற்பகல் வெள்ளி மீண்டும் ரூ. 3 உயர்ந்து கிராம் ரூ.268க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.268000க்கும் விற்பனை ஆகிறது.
- மாலி மற்றும் புர்கினா ஃபசோ அகிய நாடுகள் அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாடுகளுக்குள் நுழைய தடை விதித்துள்ளன.
- குடியரசு தின அணிவகுப்பில் ராஜபாளையம் நாய் குதிரை கழுகு இரட்டைத் திமில் ஒட்டகம் ஆகிய ராணுவ விலங்குகள் முதன்முறையாக பங்கேற்க ஏற்பாடு.







