Connect with us

ஆன்மீகம்

18 ஆண்டுகளுக்குப் பின் 2026-ல் உருவாகும் அங்காரக யோகம்: இந்த 3 ராசிகளுக்கு சிரமங்கள் அதிகம்… கவனம் அவசியம்!

Published

on

ஜோதிடத்தின் அடிப்படையில், 2026 ஆம் ஆண்டு சிலருக்கு சாதகமான யோகங்களை உருவாக்கினாலும், அதே நேரத்தில் பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அசுப யோகங்களும் உருவாகவுள்ளன. அவற்றில் மிகவும் ஆபத்தானதாக கருதப்படுவது அங்காரக யோகம் ஆகும்.

கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், நிழல் கிரகமான ராகுவுடன் இணையும் போது உருவாகும் இந்த அங்காரக யோகம், மனித வாழ்க்கையில் திடீர் சிக்கல்கள், நிதி இழப்புகள் மற்றும் உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

வேத நாட்காட்டியின் படி, 2026 பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் கும்ப ராசிக்குள் நுழையவுள்ளார். ஏற்கனவே கும்ப ராசியில் ராகு பயணம் செய்து வருவதால், இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்காரக யோகம் உருவாகிறது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் தெரிந்தாலும், குறிப்பாக 3 ராசிக்காரர்கள் அதிகமான சிரமங்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக, நிதி இழப்பு, ஆரோக்கிய குறைபாடு மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

🔴 கன்னி

கன்னி ராசியின் 6ஆம் வீட்டில் செவ்வாய் – ராகு சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகுகிறது. இதனால் உடல்நலப் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சட்டம், நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் எதிர்மறை முடிவுகள் வர வாய்ப்பு உள்ளது. இரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும். இந்த காலகட்டத்தில் பண விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. புதிய முதலீடுகள் மற்றும் கடன் பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது.

🔴 கடகம்

கடக ராசியின் 8ஆம் வீட்டில் அங்காரக யோகம் உருவாகுவதால், நோய்கள் மற்றும் விபத்து அபாயங்கள் அதிகரிக்கலாம். வாகனம் ஓட்டும் போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். தேவையற்ற செலவுகள் அதிகரித்து நிதிச் சிக்கல்கள் உருவாகலாம். இதய நோய்கள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். வணிகத்தில் ஆபத்தான முடிவுகளை தவிர்க்க வேண்டும். மன உளைச்சல் அதிகமாக இருக்கும் காலமாக இது அமையலாம்.

🔴 கும்பம்

கும்ப ராசியின் லக்னத்தில் (முதல் வீடு) செவ்வாய் – ராகு சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகுகிறது. இதனால் மன அமைதி குறையும். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் சுமத்தப்படுவதால் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படலாம். காதல் உறவுகளில் பொறுமை அவசியம். கூட்டு தொழில் செய்வதை இந்த காலத்தில் தவிர்ப்பது நல்லது.

Translate »
How much does it cost for a roof repair in 2025 commercial & residential roof contractor clark roofing.