இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 16.12.2025

- நேற்று ஆபரணத் தங்கம் சவரன் ரூ.100120 என இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்ட விலை உயர்வு இன்று ரூ.1360 குறைந்து ரூ.98800 க்கு விற்பனை ஆகிறது.
- நேற்று ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.215000 என இருந்த விலை இன்று ரூ.4000 குறைந்து ரூ.211000க்கு விற்பனை ஆகிறது.
- 100 நாள் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் பெயரிலிருந்து காந்தி பெயர் நீக்கப்பட்டு விக்சித் பாரத் ஜிராம்ஜி என பெயர்மாற்றம் செய்திட புதிய மசோதாவினை ஒன்றிய அரசு நடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது. இதனை அறிமுக நிலையிலேயே எதிர்க்க இந்தியா கூட்டணி கட்சிகள் மும்முரம்.
- மகாத்மா காந்தியின் பெயரை மாற்றுவது அவரை இன்னொரு முறை கொலை செய்வதற்குச் சமம் என விவசாய சங்கத்அ தலைவர் பெரியசாமி தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை 6 வாரங்களுக்குள் கண்டறிய உச்சநீதிமன்றம் உத்தரவு.
- தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை இருக்கும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
- காவல்துறை அதிகாரிகளின் குடியிருப்புகளில் ஆர்டர்லிகளாக வேலை செய்யும் காவலர்களை விடுவித்து மீள அவர்களை அவர்களது பணியிடங்களில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என டிஜிபி உத்தரவு.
- சென்னை மெரினா கடற்கரையில் 2400 சதுர அடியில் ரூ.86.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வீடற்றோருக்கான தங்கும் விடுதி இம்மாத இறுதியில் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.
- இந்தியா ரஷ்யா இடையே ராணுவப் படைகளை பரிமாறிக்கொள்ளும் RELOS ஒப்பந்தத்தை அங்கீகரித்து ரஷ்ய நாடாளுமன்றம் நிறைவேற்றிய கூட்டாட்சி சட்டத்தில் கையெழுத்திட்டார் ரஷ்ய அதிபர் புதின்.
- 13 லட்சம் தீலிர ஊழியர்கள் பணியாற்றும் உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தி கொண்ட நாடு இந்தியா – பாதுகாப்புத்துறை அறிவிப்பு.
- இந்திய ராணுவ அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை சோலாப்புரைச் சேர்ந்த சாய்ஜாதவ் பெற்றுள்ளார்.
