இந்தியா
ஸ்குவாஷ் விளையாட்டில் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!!!

SDAT Squash World Cup 2025 இறுதிப் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யு மாலில் இன்று மாலை நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியும் ஆங்காங் அணியும் மோதி களம் கண்டன. இந்திய அணி சீன அணியான ஆங்காங் அணியை 3-1, 3-0, 3-0 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதன்முறையாக இந்திய அணி இந்த கோப்பையை வென்றதில் இந்தியர்களும் குறிப்பாக இப்போட்டிகளை நடத்திய தமிழ்நாட்டு இளைஞர்களும் வெற்றி எக்கானமிட்டு இந்த வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

