Connect with us

இந்தியா

வடநாட்டு எம்.ஜி.ஆர் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்

Published

on

1960 ஆம் ஆண்டு வெளியான ”தில் பி தேரா அம் பி தேரி” படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 300க்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்து கடைசியாக நடித்த படம் “இக்னிஸ்“ அடுத்த மாதம் வெளிவர உள்ள நிலையில் நேற்று காலமானார் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய தர்மேந்திரா.

90 வயது வரும் டிசம்பர் 8ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் உடல்நலமில்லாமல் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திராவின் உயிர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரிந்தது.

தர்மேந்திரா என்கிற தரம்சிங் தியோல் 1935 ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி பஞ்சாப் லுதியானா மாவட்டத்தில் நஸ்ராலி என்ற கிராமத்தில் கேவல் கிஷன்சிங் தியோல் சத்வந்த் கவுர் தம்பதிக்கு மகனாக பஞ்சாபி ஜாட் சீக்கியர் குடும்பத்தில் பிறந்தார்.

நடிகர் தயாரிப்பாளர் அரசியல்வாதி என பன்முகங் காட்டிய தர்மேந்திரா 1997ல் இந்தி படவுலகிற்கு ஆற்றிய பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். 1975ல் வீரு என்ற கதாபாத்திரத்தில் கைதியாக இவர் நடித்த “ஷோலே”  அவர் நடித்ததில் குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமைந்தது. 2005ல் ஆங்கில பத்திரிகை ஒள்றின் 50 வது ஆண்டு விழாவுக்கான சிறந்த திரைப்படம் என்ற விருது  பெற்றது ”ஷோலே”.

இவர் நடித்த “யாதோன் கி பாரத்” தமிழில் ”நாளை நமதே” என்ற பெயரிலும் ”ஃபுல் அவுர் பத்தர்” ஒளிவிளக்கு என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டு எம்ஜிஆர் நடித்து வெள்ளி விழா கண்ட படங்களாகும்.  

“ஷோலே”  “யாதோன் கி பாரத்” என்ற இரு படங்களும் 1970 – 80 களில் சென்னையில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய படங்களாகும்.

“தரம் வீர்“ “சரஸ்“ “கசப்“ “ராஜ்புத்“ “ பகவத்“ “ஜானி தோஸ்த்“ உள்பட பல அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் HEMAN என போற்றப்பட்டார்.

பாஜக சார்பில் 2004 முதல் 2009 வரை ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு பணியாற்றினார்.

இவரின் முதல் திருமணம் 1954ல் அவரது 19வது வயதில் பிரகாஷ் கவுர் என்பவருடன் நடந்தது. சன்னி தியோல் பாபி தியோல் என்ற இரு மகன்கள் பிறந்தனர். மேலும் விஜீதா அஜீதா என்ற இரு மகள்களும் உள்ளனர். மும்பைக்கு வந்து திரைத்துறையில் ஈடுபட்ட பிறகு முதல் மனைவி தனக்கு விவாகரத்து அளிக்காததால் இஸ்லாம் மதத்துக்கு மாறி 2வது திருமணம் ஏமமாலினியுடன் செய்துகொண்டார்.இவர்களுக்கு அகானா தியோல் ஈஷா தியோல் என இரு மகள்கள் உள்ளனர். இவர் ஏமமாலினியுடன் ‘ராஜா ராணி“ சீதா அவுர் கீதா“ “ஷராபத்“ “நயா ஜமுனா“ உள்ளிட்ட பல படங்களில் இணைற்து நடித்துள்ளார்.

2012ல் இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மபுஷன் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

மும்பை தாதாக்களுக்கு சவால் விட்ட தர்மேந்திரா

மும்பை திரைப்பட உலகை தாவுத் இப்ராகீம் போன்ற நிழல் உலக தாதாக்கள் மிரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாலிவுட் நடிகர்கள் பயந்து கொண்டிருந்தனர்.

அப்போது தாதாக்களுக்கு எதிராக துணிச்சல் காட்டியவர் தர்மேந்திரா என பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சத்யஜித் புரி ஃபிரைடே டாக்கீஸ் என்ற மீடியா நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தாதாக்களிடம் தர்மேந்திரா ”நீங்கள் வந்தால் முழு சAனேவலும் பஞ்சாபில் இருந்து வருவார்கள். உங்களிடம் 10 பேர் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு ஒரு ராணுவமே இருக்கிறது. என்னிடம் இருந்து ஒரு வார்த்தை வெளிவந்தால் போதும். பஞ்சாப் மாநிலத்தில் இருந்து லாரிகள் நிறைய மக்கள் சண்டையிட வருவார்கள். என்னுடன் மோதாதீர்கள் என்று கூறினார். அதேபோல் தர்மேந்திராவுடன் ஒருபோதும் தாதாக்கள் மோதல் போக்கை கையாளவில்லை.

தர்மேந்திரா மறைவுக்கு நடிகர்கள் அமிதாப்பச்சன் ரஜினிகாந்த் ஷாருக்கான் ஆமிர்கான் சல்மான்கான் சிரஞ்ஜீவி அல்லு அர்ஜீன் ஜீனியர் என்டிஆர் ரித்திக்ரோஷன் விஷால் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்2 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized3 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்3 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

சினிமா7 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்6 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா7 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வணிகம்6 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்6 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

வணிகம்5 நாட்கள் ago

EPFO KYC Update: PF கணக்கில் KYC விவரங்களை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி!

Translate »
קירה בחיפה והסביבה – נערות ליווי בבית שאן. イバシーポリシー. Verlage.