Connect with us

வணிகம்

வெளிநாட்டிலிருந்து தங்கம் கொண்டு வரும் ரகசிய விதிகள் – 2025 வழிகாட்டி!

Published

on

வெளிநாட்டில் இருந்து தங்கம் வாங்கி வரலாமா? – இது பலருக்கும் உள்ள கேள்வி. குறிப்பாக வெளிநாட்டில் வேலை செய்து திரும்பும் இந்தியர்கள், தங்கம் எவ்வளவு அளவு கொண்டு வரலாம், எந்த சட்ட விதிகள் உள்ளன என்பதைக் தெரிந்து கொள்வது முக்கியம்.

சுங்கச் சட்டம், 1962 படி:

  • ஆண்கள்: ஆண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கி இருந்தால், அதிகபட்சம் 20 கிராம் தங்கம், மதிப்பு ₹50,000 வரை.

  • பெண்கள்: அதிகபட்சம் 40 கிராம் தங்கம், மதிப்பு ₹1,00,000 வரை.

நடைமுறை விளக்கம்:

  • ஆண்கள் சுமார் 5 கிராம், பெண்கள் சுமார் 10 கிராம் 22 காரட் தங்கத்தை வரம்பிற்குள் கொண்டு வர முடியும்.

  • அதிக தங்கம் கொண்டுவர விரும்பினால், தனிப்பட்ட விதிகள் உள்ளன.

குறைந்தது 6 மாதங்கள் வெளிநாட்டில் தங்கி, இந்தியாவில் 30 நாட்களுக்கு மேல் இல்லாதவர்களுக்கு:

  • 10 கிலோ வரை தங்கம் கொண்டு வரலாம்

  • சுங்கவரி கட்டணம் கட்ட வேண்டும்

விமான நிலைய நடைமுறை:

  • தங்கம் கொண்டு வரும் போது, ‘ரெட் சேனல்’ வழியே செல்ல வேண்டும்

  • Form-1 மூலம் தங்க விவரங்களை பதிவு செய்ய வேண்டும் அல்லது Atithi App மூலம் முன்பே தகவல் கொடுக்கலாம்

  • விதிகளை பின்பற்றாதவர்கள் தங்கம் பறிமுதல் மற்றும் அபராதம் சந்திக்கலாம்

தனிப்பட்ட பயன்பாட்டிற்கான விதிகள்:

  • தனிப்பட்ட நகைகள் கொண்டு வருவோருக்கு சுங்கவரி விதி இல்லை

  • ஆனால், “தனிப்பட்ட பயன்பாடு” என்ற அர்த்தத்தை சுங்கத் துறை விளக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
me profile.