ஆன்மீகம்
Solar Eclipse 2025: செப்டம்பர் 21 ஆம் தேதி இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று, செப்டம்பர் 21, 2025, ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது: 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள். இதற்குள் ஏற்கனவே 1 சூரிய கிரகணம் மற்றும் 2 சந்திர கிரகணங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த மாதம் செப்டம்பர் 7-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது, பலரும் ரத்த கலர் நிலவை நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.
இந்த மாதத்திலேயே 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் நடக்கவுள்ளது. இது அமாவாசை நாளில், அதாவது செப்டம்பர் 21, 2025 அன்று நடைபெறும். அதே நாளில் சர்வ பித்ரு அமாவாசை நிகழவும், மறுநாள் நவராத்திரி பண்டிகை தொடங்கும்.
கிரகண நேரம்:
தொடக்கம்: செப்டம்பர் 21, 2025, இரவு 10:59
முடிவு: செப்டம்பர் 22, 2025, அதிகாலை 3:23
நீளம்: சுமார் 4.5 மணி நேரம்
அஷ்வின் மாத கிருஷ்ண பக்ஷ அமாவாசை நாளில் நடைபெறும்.
இந்தியாவில் தெரியுமா?
இந்த சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம் ஆகும். மேலும், இரவில் நிகழுவதால் இந்தியாவில் இதனை காண முடியாது.
சூரிய கிரகணம் எங்கு தெரியும்?
இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும், கீழ்க்காணும் பகுதிகளில் தெளிவாகக் காணப்படும்:
தெற்கு பசிபிக் பெருங்கடல்
நியூசிலாந்து
ஆஸ்திரேலியா
ஆப்பிரிக்கா
இந்தியப் பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
தென் பெருங்கடல்
பாலினீசியா, மெலனேசியா
நோர்போக் தீவு, கிறைஸ்ட்சர்ச், வெலிங்டன்
இந்த சூரிய கிரகணம் விண்வெளி ஆர்வலர்களுக்கும், கிரகண பார்வையாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வானியல் நிகழ்வு! 2026-ன் கடைசி சூரிய கிரகணம் எப்போது? இந்தியாவில் தெரியுமா?

2025 கடைசி சூரிய கிரகணம்: ராசிக்காரர்களுக்கு நேர்மறை மாற்றங்கள்!

சூரிய கிரகணம் 2025: இன்று மஹாளய அமாவாசை கிரகணத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

சூரிய கிரகணம் 2025: செப்டம்பர் 21 அன்று நிகழும் கடைசி சூரிய கிரகணத்தால் பிரச்சனைகள் சந்திக்கப்போகும் ராசிகள்!

இந்த வாரம் துவங்கும் நவராத்திரி: ஒன்பது நாள்கள் மகா கொலாகலமாக கொண்டாடப்படும்!

சூரிய கிரகணம் 2025: செப்டம்பர் 21ம் தேதி ஏற்படும் இரண்டாவது கிரகணம் – எச்சரிக்கை மற்றும் அறிவுரைகள்!


