வணிகம்
Flipkart Big Billion Days Sale 2025 – எப்போது தொடங்கும்? iPhone, MacBook, PS5 வரை தள்ளுபடிகள்!

ஆன்லைன் ஷாப்பிங் ரசிகர்களுக்கு மிகப்பெரிய செய்தி! இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், தனது வருடாந்திர Big Billion Days Sale 2025 பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பிளிப்கார்ட் தளத்தில் இந்த மாபெரும் விற்பனைக்கு டீசர்கள் வெளியாகி, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
📅 Flipkart Big Billion Days 2025: எப்போது தொடங்கும்?
பொதுவாக பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் தொடக்கம் வரை நடைபெறும். இதன் அடிப்படையில், இந்த ஆண்டு விற்பனை செப்டம்பர் 30, 2025 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
VIP, Plus மற்றும் Black சந்தாதாரர்கள் – அதிகாலை 12:00 மணி முதல் அணுகலாம்.
வழக்கமான பயனர்கள் – மதியம் 12:00 மணி முதல் சேலுக்கு அணுகலாம்.
🎁 Flipkart Big Billion Days 2025: சலுகைகள்
இந்த சேலில் பல்வேறு கேஜெட்களிலும் வீட்டு உபயோகப் பொருட்களிலும் பெரிய அளவில் தள்ளுபடிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் – iPhone 16 Pro Max, Samsung Galaxy S24, Moto Edge 60 Pro உள்ளிட்ட பல மாடல்களில் மிகப்பெரிய தள்ளுபடிகள்.
கேமிங் – PlayStation 5, கன்சோல்கள் மற்றும் கேமிங் அசெசரிகளில் சிறப்பு விலை.
மடிக்கணினிகள் & ஸ்மார்ட் டிவிகள் – குறிப்பாக MacBook M2 மற்றும் பிரபல பிராண்டுகளின் ஸ்மார்ட் டிவிகள் தள்ளுபடியில் கிடைக்கும்.
அசெசரிகள் – போன் கவர்கள், கேமராக்கள், ஹெட்போன்கள் உள்ளிட்ட பொருட்களிலும் சலுகைகள்.
🏦 Flipkart Big Billion Days 2025: வங்கி சலுகைகள்
Axis Bank மற்றும் ICICI வங்கி கார்டுகள் மூலம் 10% உடனடி தள்ளுபடி.
No Cost EMI & Exchange Offers – வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை.
சுலபமான கட்டண முறைகள், இந்த விற்பனையை இன்னும் சிறப்பாக்க உள்ளன.




















