ஆன்மீகம்
ஆகஸ்ட் 10–16, 2025 வார ராசி பலன்: புதன் வக்கிர நிவர்த்தி – 12 ராசிகளுக்கும் நல்ல பலன்!

ஆகஸ்ட் 10 முதல் 16, 2025 வரை வார ராசி பலன்
இந்த வாரம் புதன் வக்கிர நிவர்த்தி பெறுவதால் 12 ராசிகளுக்கும் பல நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சந்திரன், ராகு, குரு, சுக்கிரன் ஆகியோர் சேர்க்கை பல முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். சனி வக்கிர நிலைமையும் ஏற்படுகிறது.
மேஷம்
அரசு வேலை வாய்ப்பு, எதிரிகள் இல்லாத காலம். முதல் 2 நாட்கள் நண்பர்கள் உறவில் கவனம் தேவை. பிறகு அனைத்தும் சாதகமாகும்.
வழிபாடு: வீரராகவ பெருமாள்.
ரிஷபம்
மன உறுதி அதிகரிக்கும், குடும்ப சண்டைகள் முடியும், வேலை டென்ஷன் அகலும். சுப செலவுகள் கூடும்.
வழிபாடு: ஆதிநாராயண பெருமாள்.
மிதுனம்
முக்கிய விஷயங்கள் தாமதமாகலாம். பயணங்களில் கவனம், ஆரோக்கியத்தில் அக்கறை. பொருளாதாரம் மேம்படும்.
வழிபாடு: கஜலட்சுமி.
கடகம்
திட்டமிட்டவை எளிதில் நிறைவேறும், மருத்துவ துறையில் வாய்ப்பு. செலவு அதிகரிக்கும்.
வழிபாடு: பெருமாள், அரங்கநாதன்.
சிம்மம்
வெளிநாட்டு பயண வாய்ப்பு, உடல் நலம் தொடர்பான சிறிய பிரச்சனைகள். லாபம் அதிகரிக்கும்.
வழிபாடு: அயோத்தி ராமபுரான்.
கன்னி
பதவி உயர்வு, வெற்றி, அரசியல் ஆதரவு, பெரிய ஆட்களுடன் தொடர்பு.
வழிபாடு: நரசிம்மர்.
துலாம்
ஆலய சேவை, அரசு பதவி, ஆரோக்கியத்தில் 2 நாட்கள் கவனம். பிரச்சனைகள் சரியாகும்.
வழிபாடு: வீரராகவ பெருமாள்.
விருச்சிகம்
வெளிநாட்டு பயணம், சொத்து பிரச்சனைகள் தீர்வு, பொருளாதார உயர்வு.
வழிபாடு: பெருமாள்.
தனுசு
உள்ளுணர்வு வலுவாகும், வேலை அழுத்தம் இருந்தாலும் வெற்றி உறுதி. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள்.
வழிபாடு: வெங்கட்ரமண சுவாமி.
மகரம்
ஞானம், தைரியம் அதிகரிக்கும், சிரமமான காரியங்களும் எளிதில் நிறைவேறும்.
வழிபாடு: நாமகிரி அம்மன்.
கும்பம்
முதல் 2 நாட்கள் டென்ஷன், வண்டி பயணத்தில் கவனம். பிறகு திட்டங்கள் வெற்றியடையும்.
வழிபாடு: நரசிம்மர்.
மீனம்
சுப செலவுகள், மன அமைதி, சுகம், நல்ல நிகழ்வுகள்.
வழிபாடு: ஆஞ்சனேயர்.


















