செய்திகள்
அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: ஈட்டிய விடுப்புக்கு பணபலன் வழங்கும் திட்டத்துக்கான அரசாணை வெளியீடு!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்த ஈட்டிய விடுப்பை பணபலனாக பெறும் திட்டம் தொடர்பான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு முன் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணபலனாக மாற்றும் வாய்ப்பு இருந்தது. ஆனால், கொரோனா காலத்தில் இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டு, அதன் பின்னர் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு பொறுப்பேற்றது. அதன் பிறகு இது மீண்டும் அமலுக்கு வரும் என ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.
2025-26 பட்ஜெட் கூட்டத்தில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்தத் திட்டம் 2026 ஏப்ரல் 1 முதல் 15 நாட்கள் வரை அமலுக்கு வரும் என அறிவித்தார். ஆனால், ஊழியர்கள் உடனடியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கோரினர்.
இதனை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ், முதலமைச்சர் அவர்கள் இந்த ஆண்டு அக்டோபர் 2025 முதல் ஊழியர்கள் ஈட்டிய விடுப்பில் இருந்து 15 நாட்கள் வரை பணபலன் பெறலாம் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு இன்று அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் இதுவொரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

8வது ஊதியக் குழு: அரசு ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் வாகன முன்பணம்? புதிய சலுகைகள் குறித்து முக்கிய அப்டேட்!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

8வது ஊதியக்குழு அதிரடி மாற்றங்கள்: சம்பள உயர்வும், விடுமுறை தினங்களும் அதிகரிக்கின்றன!

தமிழக அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி உயர்வு? ஸ்டாலின் புது திட்டம் என்ன சொல்லும்!

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு விரைவில் – அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு மகிழ்ச்சித் தகவல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இருமுறை சீருடை கொடுப்பனவு – புதிய விகிதாசார முறையை அறிவித்த நிதி அமைச்சகம்!




