Connect with us

ஆன்மீகம்

500 ஆண்டுக்கு பிறகு குரு – சனி அபூர்வ சேர்க்கை: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டம், செல்வம், ஜாக்பாட்!

Published

on

ஜோதிட உலகில் நூற்றாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய சந்திப்பாக, சனி பகவான் மற்றும் குரு பகவான் ஆகிய இருவரும் சேரும் அபூர்வ சூழ்நிலை உருவாகியுள்ளது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்தச் சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை ஜூலை மாதத்தில் தொடங்கியுள்ளது.

ஜூலை 9ம் தேதி குரு பகவான் மிதுன ராசியில் உதயமாகியுள்ளார். ஜூலை 13ம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையை அடைந்தார். இந்த இரு மாற்றங்களும் 2025 நவம்பர் 28 வரை பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தப்போகின்றன. குறிப்பாக, 5 ராசிக்காரர்களுக்கு இது அதிர்ஷ்டத்தின் வாயிலாக அமையப்போகிறது.

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்:

  • ரிஷபம்: பண வரவு பல மடங்கு அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். அரசு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் சரியான நேரம் இது. உடல் நலம் திரும்பும். பழைய நண்பர்களுடன் சந்திப்பு ஏற்படும்.

  • மிதுனம்: சமூக மரியாதை கூடும். திடீர் பண வரவு உண்டாகும். நீதிமன்ற விசயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். ஏழைகளுக்கு உதவுவதால் நல்ல கர்ம புண்ணியம் சேரும்.

  • கன்னி: சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வேலையிலும், தொழிலிலும் வெற்றி. தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் சமநிலை ஏற்படும்.

  • தனுசு: நிலுவையில் உள்ள திட்டங்கள் நிறைவேறும். சொத்து, வாகன வாங்கும் யோகம். குடும்பம் முழு ஆதரவாக இருக்கும். புனித யாத்திரைக்கு செல்ல வாய்ப்பு.

  • மீனம்: வியாபாரத்தில் லாபம் பெரும். வேலைக்கு புதிய பொறுப்புகள். ஆன்மீக ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் வெற்றிக்கரமாக அமையும்.

சனி மற்றும் குரு பகவான்களின் அருளைப் பெற தினமும்:
ஓம் நமோ பகவதே வசுதேவாய மற்றும்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லும் சை சனி சராய நம: என ஜபிக்கலாம்.

Translate »
Products collect leads.