செய்திகள்
இந்தி திணிப்பு விவகாரம்: உத்தவ் தாக்கரே தரப்பின் பதிலுக்கு ஸ்டாலின் ஆதரவு… பின்னடைந்தது யாருக்கு?

மகாராஷ்டிரா இந்தி விவகாரம் – ஸ்டாலினின் வரவேற்புக்குப் பின், உத்தவ் தாக்கரே தரப்பில் புதிய விளக்கம்!
மகாராஷ்டிரா அரசு, முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தியை மூன்றாவது மொழியாக கற்பிப்பதாக அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிராக மாநிலத்தில் உணர்ச்சியோடும், எழுச்சியோடும் எதிர்ப்புகள் எழுந்தன. இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின் ஒரே மேடையில் தோன்றிய உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே, இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
இவர்கள் எடுத்த இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டை வரவேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “இந்தித் திணிப்புக்கு எதிரான திராவிட மொழிப் போராட்டம், மாநில எல்லைகளை கடந்து மகாராஷ்டிராவையும் தாக்கியுள்ளது” எனக் கூறி தனது ஆதரவை பதிவு செய்தார்.
ஸ்டாலின் உரையின் முக்கிய அம்சங்கள்:
“இந்தி திணிப்புக்கு எதிரான மராட்டிய எழுச்சி கண்களைத் திறக்கும்.”
“பாஜகவின் மொழி விருத்தி நோக்கம் மாநிலங்களுக்கு ஆதிக்கம் செலுத்துவதாகும்.”
“மராட்டியத்தில் மக்கள் எழுச்சி மூன்றாவது முறையாக பாஜகவை வளைத்து விட்டது.”
இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தரப்பில் இருந்து, ஸ்டாலினின் நிலைப்பாட்டிற்கும் தங்களின் நோக்கிற்கும் வேறுபாடு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளர்.
சஞ்சய் ராவத்தின் விளக்கம்:
“ஸ்டாலின் அவர்கள் யாரையும் இந்தி பேச விடக்கூடாது எனக் கூறுகிறார். ஆனால் மகாராஷ்டிராவில் எங்கள் நோக்கம் அப்படி அல்ல.
நாங்கள் இந்தி பேசுகிறோம், இந்தி படங்கள் பார்க்கிறோம்.
ஆனால் தொடக்கக் கல்வியில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மட்டுமே எங்கள் போராட்ட நோக்கம்.”
இந்த கருத்துகள், INDIA கூட்டணிக்குள்ளும் இந்தி மொழியைப்பற்றிய பார்வையில் மாறுபாடுகள் இருப்பதை வெளிக்கொணர்கின்றன என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக…
— M.K.Stalin (@mkstalin) July 5, 2025
