வணிகம்
8வது ஊதியக்குழு – ஓய்வூதியதாரர்களுக்கு எகிறப்போகும் மாத வருமானம்!

மத்திய அரசு விரைவில் 8வது ஊதியக் குழுவின் விதிமுறைகளை (Terms of Reference – TOR) அறிவிக்க உள்ளது. இது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மிகப்பெரிய நன்மையை வழங்கும் வகையில் அமையும் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊதிய உயர்வில் ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு பலன்
2025 டிசம்பரில் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் முடிவடைய உள்ள நிலையில், 2026 ஜனவரியில் புதிய 8வது ஊதியக்குழு அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுவின் மூலம் ஓய்வூதியத்துக்கு அடிப்படை உயர்வு ஏற்படும்.
ஃபிட்மெண்ட் பாக்டர் (Fitment Factor) என்பது இந்த உயர்வின் முக்கியமான காரணியாகும். இது 1.92 முதல் 2.86 வரையான வரம்பில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📈 ஓய்வூதியத்தில் எவ்வளவு உயர்வு? எடுத்துக்காட்டுகள்:
| ஃபிட்மெண்ட் பாக்டர் | ஓய்வூதியம் (ரூ.30,000 அடிப்படையில்) |
|---|---|
| 1.92 | ₹57,600 |
| 2.08 | ₹62,400 |
| 2.28 | ₹68,400 |
| 2.57 | ₹77,100 |
கூடுதலாக, கிரேட் பே ₹2000-இல் ஓய்வு பெற்றவர்களின் தற்போதைய ரூ.13,000 ஓய்வூதியம்,
1.92 பாக்டரில்: ₹24,960
2.08 பாக்டரில்: ₹27,040
2.28 பாக்டரில்: ₹29,640 ஆக அதிகரிக்கும்.
🗓️ எப்போது அமலாகும்?
TOR அறிவிப்பு: 2-3 வாரங்களில்
குழு அறிக்கை: 2026 முதல் பாதியில்
அமலாக்க தேதி: ஜனவரி 1, 2026 (அரியர் தொகை உடன்)

