Connect with us

வணிகம்

8வது ஊதியக்குழு: ரூ.15 லட்சம் வரை காப்பீட்டு உயர்வு? – மத்திய ஊழியர்களுக்குச் சூப்பர் நிவாரணம் எதிர்பார்ப்பு!

Published

on

மத்திய அரசு ஊழியர்களுக்காக 8வது ஊதியக்குழு வரவிருக்கிறது. இதில், சம்பள உயர்வுடன் கூடுதலாக, காப்பீட்டுத் தொகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தற்போதைய மத்திய அரசு ஊழியர் குழு காப்பீட்டுத் திட்டமான CGEGIS –ன் கீழ் வழங்கப்படும் காப்பீட்டு தொகை மிகக் குறைவாக இருப்பதால், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு போதிய பாதுகாப்பில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், புதிய ஊதியக்குழுவில் இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டார தகவல்களின் படி, CGEGIS காப்பீட்டுத் தொகையை தற்போதைய ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் வரை உயர்த்த அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனுடன், ஊழியர்கள் செலுத்தும் மாத சந்தாவும் (எ.கா. ரூ.60க்கு பதிலாக ரூ.500) அதிகரிக்கலாம்.

இதுவரை நிலவிய CGEGIS திட்டம்:

  • குரூப் A – காப்பீட்டு தொகை ரூ.1,20,000 | மாத சந்தா ரூ.120

  • குரூப் B – காப்பீட்டு தொகை ரூ.60,000 | மாத சந்தா ரூ.60

  • குரூப் C – காப்பீட்டு தொகை ரூ.30,000 | மாத சந்தா ரூ.30

இந்த தொகைகள் 1990ம் ஆண்டு முதல் மாற்றமின்றி செயல்பட்டு வருகின்றன.

7வது ஊதியக்குழு காலத்திலும், ரூ.50 லட்சம் வரை காப்பீட்டு விருப்பங்களை பரிந்துரித்திருந்தாலும், அதன் சந்தா அதிகம் என்பதால் ஊழியர்கள் அதனை எதிர்த்தனர். இதனால், பரிந்துரைகள் நடைமுறைக்கு வரவில்லை.

இந்த முறை 8வது ஊதியக்குழு, ஊழியர்களின் கருத்துக்களுடன் புதிய மாதிரிகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது. AISGEF உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ரூ.15 லட்சம் வரை காப்பீடு வழங்க அரசு கட்டாயமாக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இதன் மூலம், பணிக்காலத்தில் உயிரிழப்பிற்குள்ளாகும் ஊழியரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்படும். இது மத்திய ஊழியர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும் என நம்பப்படுகிறது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

Translate »
Instant stripe payments.