ஆரோக்கியம்
உப்பு இறக்குமதி தாமதம்: மோசமான வானிலையால் இலங்கையில் உப்பு பற்றாக்குறை நீடிக்கிறது!

மோசமான வானிலை காரணமாக உப்பு இறக்குமதி தாமதம் – இலங்கையில் உப்பு பற்றாக்குறை நீடிக்கிறது
இலங்கையில் தற்போது நிலவி வரும் உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு கடந்த மே 21ம் தேதி இரவு நாட்டை அடைய திட்டமிடப்பட்டது.
இந்தக் கடைமட்ட முயற்சியின் கீழ், தனியார் துறையால் 250 மெட்ரிக் டன் உப்பும், தேசிய உப்பு நிறுவனத்தால் 2,800 மெட்ரிக் டன் உப்பும், மொத்தம் 3,050 மெட்ரிக் டன் உப்பும் இறக்குமதி செய்யப்பட வேண்டியது.
இருப்பினும், கடுமையான வானிலை சூழ்நிலைகள் காரணமாக, இந்த உப்பு கையிருப்பு இலங்கைக்கு வருவதில் சில நாட்கள் தாமதம் ஏற்படலாம் என்று தேசிய உப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன், இறக்குமதி தொடர்ச்சியாக நடைபெறும் என்றும், இதனால் சந்தையில் ஏற்பட்டுள்ள உப்பு பற்றாக்குறை விரைவில் நீங்கும் என்றும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.














