செய்திகள்
ரேஷன் கார்டு இல்லாமல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியுமா? முழுமையான விளக்கம் இங்கே!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?
தமிழ்நாடு அரசு மகளிருக்கான முக்கிய நலத்திட்டமாகக் கொண்டு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், தற்போது புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியை விரிவாக்கம் செய்து வருகிறது.
இதுவரை இந்தத் திட்டத்தில் சேராத பெண்கள், புதியதாக விண்ணப்பிக்க ஜூன் 4 ஆம் தேதி “மக்களுடன் முதலவர்” என்ற சிறப்பு முகாம் மாநிலம் முழுவதும் 9000 இடங்களில் நடத்தப்பட உள்ளது. இதில் வங்கி பாஸ்புக் நகல், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், இதில் ஒரு முக்கிய கேள்வி பலரிடம் எழுகிறது:
“ரேஷன் கார்டு இல்லாதவர்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியுமா?”
இதற்கான பதில்: இல்லை.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மிக முக்கியமான அடிப்படை ஆவணம் – குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) ஆகும். இதை இல்லாமல் விண்ணப்பம் செய்ய முடியாது. மேலும், பொருளில்லா அட்டை வைத்திருப்பவர்களும் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக சேர முடியாது.
✅ விண்ணப்பிக்க தேவையான அடிப்படை ஆவணங்கள்:
குடும்ப அட்டை (ரேஷன் கார்டு)
ஆதார் கார்டு
வங்கி பாஸ்புக் நகல்
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்





