ஆன்மீகம்
தங்க பாதத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் – இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் உறுதி!

ஜோதிடச் சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களில் முக்கியமான இடம் வகிக்கும் சனீஸ்வரன் தற்போது தங்க பாதத்தில் சஞ்சரித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி, சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த பெயர்ச்சி, தற்போது தங்க பாதத்தில் உள்ளதற்காகவே மிகுந்த சிறப்பாக கருதப்படுகிறது.
சனி பகவான் தங்க பாதத்தில் சஞ்சரிக்கிறார் என்பது, பலருக்கும் அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பண வரவு, மன நிம்மதி ஆகியவற்றை நிச்சயமாக தரும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.
சனிபகவானின் நான்கு பாதங்கள்:
இரும்பு பாதம் – சோதனைகள், துன்பங்கள்
செம்பு பாதம் – தடை, தாமதங்கள்
வெள்ளி பாதம் – சீரான வளர்ச்சி
தங்க பாதம் – ராஜயோகம், அதிர்ஷ்டம், முன்னேற்றம்
தற்போது தங்க பாதத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், சில ராசிக்காரர்களுக்கு மிகுந்த நன்மைகளை வழங்க உள்ளார்.
அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்:
1. ரிஷப ராசி (Taurus):
அதிர்ஷ்ட பண வருவாய், எதிரிகள் தோல்வியடைவார்கள், தொழிலில் உயர்வு, குடும்ப நிம்மதி கிடைக்கும்.
ராஜயோகம் உறுதி.
2. மிதுன ராசி (Gemini):
பழைய பிரச்சனைகள் தீரும், பண வசதி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை, சுற்றுலா வாய்ப்பு.
3. துலாம் ராசி (Libra):
வேலை வாய்ப்புகள் கிடைக்கும், லாபம் அதிகரிக்கும். திறமையை நிரூபிக்க சந்தர்ப்பம்.
4. மீன ராசி (Pisces):
ஜென்ம சனி இருந்தும் சனிபகவானின் அருள் இருக்கும். உடல்நல நன்மை, தேர்வுகளில் வெற்றி, நிதி ஆதாயம்.





