ஆன்மீகம்
அக்னி நட்சத்திரம் 2025: வெயில் காலத்தில் என்ன செய்யலாமும், செய்யக் கூடாதவையும்!

அக்னி நட்சத்திரம் 2025 தொடங்கியது! இந்த 18 நாட்களில் என்ன தவிர்க்க வேண்டும்?
அக்னி நட்சத்திரம் இன்று (மே 11) முதல் மே 28 வரை நீடிக்கிறது. இந்த காலகட்டம் சூரிய பகவானின் உச்ச நிலையை குறிக்கும், அதனால் இயற்கையாகவே வெப்பம் கடுமையாக இருக்கும். இந்த காலத்துக்கேற்ப சில ஜோதிட ரீதியான நம்பிக்கைகள் மற்றும் மரபுகளை பின்பற்றுவது முக்கியமாகக் கருதப்படுகிறது.
அக்னி நட்சத்திரத்தின் கால வரம்பும் முக்கியத்துவமும்:
அக்னி நட்சத்திரம் என்பது சூரியன் மேஷ ராசியின் பரணி நட்சத்திரம் 3ஆம் பாகம் தொடங்கி, ரிஷப ராசியின் ரோகிணி நட்சத்திரம் 2ஆம் பாகம் வரை செல்லும் காலக்கட்டமாகும்.
இந்த 18 நாட்கள் சூரியன் மிகுந்த உக்கிர நிலையில் இருப்பதால், அதை அகவணக்கத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.
இந்த காலத்தில் தவிர்க்க வேண்டியவை:
சொத்து வாங்கல், கிரக பிரவேசம் போன்ற முக்கியமான காரியங்களை தவிர்க்க வேண்டும்.
புதிய வாகனங்கள் வாங்காதீர்கள்.
புதிய தொழில்கள் அல்லது பிஸினஸ்கள் தொடங்க வேண்டாம்.
அசைவ உணவுகளைத் தவிர்க்க பரிந்துரை செய்யப்படுகிறது.
யாத்திரை மற்றும் சுற்றுலாவையும் சூரிய வெப்பம் காரணமாக தவிர்க்கலாம்.
என்ன செய்யலாம்?
முருகனை வழிபடுவது மிக நல்லது.
தியானம், வாழ்க்கையில் அமைதி மற்றும் சகிப்புத் தன்மை கற்றுக்கொள்வதற்கு ஏற்ற காலம்.
ஏற்கனவே நிலுவையிலுள்ள சொத்து தொடர்பான பிரச்சனைகள் அல்லது கேஸ்கள் இருப்பின் முடித்துவிடலாம்.
தவிர்க்க முடியாத திருமணங்களை மட்டும் நடத்தலாம்.













