வணிகம்
மே 1 முதல் முக்கிய விதி மாற்றங்கள் – எல்பிஜி விலை, ATM கட்டணம், ரயில்வே டிக்கெட், EPFO இல் புதிய மாற்றங்கள்!

சென்னை:
மே மாதம் தொடங்கும் நாளான மே 1, 2025 முதல் பல முக்கிய அரசு விதிகள் மற்றும் சேவைகளில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இந்த மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை நேரடியாக பாதிக்கக்கூடியவை. குறிப்பாக, எல்பிஜி சிலிண்டர் விலை, ஏடிஎம் கட்டணம், ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகள், EPFO நவீனப்படுத்தல், வங்கி வட்டி விகிதங்கள் என பல பகுதிகளில் இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
🔹 எல்பிஜி சிலிண்டர் விலை மாற்றம்:
ஒவ்வொரு மாதமும் போல, மே 1ஆம் தேதி எல்பிஜி விலைகளில் மாற்றம் இருக்கும். இது வீட்டு உபயோக மற்றும் வணிக எல்பிஜி சிலிண்டர்களில் விலை உயர்வு அல்லது குறைப்பு என்ற வகையில் அமையலாம்.
🔹 ATM பணம் எடுக்கும் கட்டணம் உயர்வு:
ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் NPCI இணைந்து, ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணத்தை ரூ.21-இலிருந்து ரூ.23-ஆக உயர்த்தியுள்ளன. இது மே 1 முதல் அமலுக்கு வரும். இலவசமாக பணம் எடுக்கும் வரம்பை மீறினால் இந்த கட்டணம் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.
🔹 வங்கி வட்டி விகித மாற்றம்:
ரெப்போ விகித குறைப்பு காரணமாக, பல வங்கிகள் தங்களுடைய நிலையான வைப்பு மற்றும் கடன் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. இதனால், சேமிப்புகளிலும் கடன்களிலும் நேரடி தாக்கம் ஏற்படும்.
🔹 கிராமப்புற வங்கிகளில் புதிய மாற்றம்:
“ஒரு மாநிலம் – ஒரு கிராமப்புற வங்கி” திட்டம் அமலாக்கப்பட உள்ளது. இது முதற்கட்டமாக 11 மாநிலங்களில் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் சிறிய கிராம வங்கிகள் ஒன்றிணைக்கப்பட உள்ளன.
🔹 ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதி மாற்றம்:
இனிமேல் காத்திருப்பு டிக்கெட் வைத்திருக்கும்போது ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது. இது மே 1 முதல் அமலுக்கு வரும்.
🔹 8வது ஊதியக்குழு நடவடிக்கைகள் ஆரம்பம்:
மத்திய அரசு அறிவித்த 8வது ஊதியக்குழு (8th Pay Commission) மே மாதத்தில் செயல்படத் தொடங்கும். தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு பரிந்துரை செயல்படுத்தப்படும்.
🔹 EPFO 3.0 புதிய அம்சங்கள்:
EPFO தனது 3.0 மேம்பாட்டு பதிப்பில் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. உறுப்பினர்களின் பண்பட்ட சேவைகள், ஆன்லைன் அப்டேட்கள் மே மாதம் முழுக்க பிரசுரமாகும்.



