வணிகம்
தங்கம் வெள்ளியைவிட தாமிரமே இனி பெஸ்ட்: அனில் அகர்வால் கணிப்பு பரபரப்பு!

தங்கம், வெள்ளி விலையைத் தாண்டும் உலோகம்: அனில் அகர்வால் வெளியிட்ட முக்கிய கணிப்பு!
தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது என்றாலும், இனி முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது வேறு ஒரு உலோகம் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் சமூக ஊடக தளமான X (முன்பு ட்விட்டர்)-இல் வெளியிட்ட பதிவில், இந்த புதிய உலோகத்திற்கான தேவை எதிர்காலத்தில் மிக அதிகமாக இருக்கப்போகிறது எனக் கூறியுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ள உலோகம் தாமிரம் (Copper) ஆகும். அதாவது, தங்கத்தையும் வெள்ளியையும் விட தாமிரமே எதிர்காலத்தின் முக்கிய முதலீட்டு வாய்ப்பு என அவர் வலியுறுத்துகிறார்.
ஏன் தாமிரம் முக்கியமா போகுது?
தாமிரத்திற்கு உலகளாவிய அளவில் தேவை அதிகரித்து வருகிறது. காரணங்கள்:
எலக்ட்ரிக் வாகனங்கள் (EVs)
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்
செயற்கை நுண்ணறிவு (AI)
பாதுகாப்பு உபகரணங்கள்
இவை அனைத்திலும் தாமிரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் விளைவாக, தாமிரத்தின் தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நிறுவனங்களின் நடவடிக்கைகள்
பாரிக் கோல்ட் என்ற கனடா நிறுவனம், தாமிரத்திற்கான கவனத்தை அதிகரிப்பதற்காக, தனது பெயரை “Barrick” என மாற்றியுள்ளது. இது தாமிர சுரங்க வேலைகளில் கவனம் செலுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்டது.
அனில் அகர்வால் மேலும் கூறுகையில், தாமிர சுரங்கங்கள், சுத்திகரிப்பு மையங்கள், உருக்காலைகள் அனைத்தும் அதிகரிக்கப்படுவதாகவும், இந்தியா இதனை தேசிய இலட்சியமாக எடுத்துக்கொண்டால், இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.
The world’s second largest gold producer, Barrick Gold is rebranding to just Barrick. That is because it sees its future in copper.
Copper is the new super metal which is being heavily used in every advanced technology, whether EVs, renewable energy infrastructure, AI or defence… pic.twitter.com/YUDC5Rid4r
— Anil Agarwal (@AnilAgarwal_Ved) April 17, 2025


