செய்திகள்
சென்னை உயர்நீதிமன்ற வேலைவாய்ப்பு 2025 – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும், ரூ.58,100 வரை சம்பளம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் 392 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு – எழுத்துத் தேர்வு மூலம் தேர்ச்சி பெற வாய்ப்பு!
சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் 2025ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 8ம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. மொத்தம் 392 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது அரசுப் பணியை நாடுபவர்களுக்கு அரிய வாய்ப்பாக இருக்கிறது.
காலியிட விவரம்:
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
|---|---|
| அலுவலக உதவியாளர் | 137 |
| குடியிருப்பு உதவியாளர் | 87 |
| சோப்தார் | 12 |
| ரூம் பாய் | 04 |
| துப்புரவு பணியாளர் | 73 |
| தோட்டக்காரர் | 24 |
| வாட்டர்மேன் | 02 |
| சுகாதார பணியாளர் | 49 |
| வாட்ச்மேன் | 04 |
கல்வித் தகுதி:
குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி இருந்தாலே போதுமானது.
அலுவலக உதவியாளர் பணிக்கு லைட் வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பவர்கள் முன்னுரிமை பெறுவார்கள்.
குடியிருப்பு உதவியாளர் பதவிக்கு Craft Course (1 ஆண்டு) முடித்திருக்க வேண்டும்.
சமையல், ஹவுஸ் கீப்பிங், பேக்கரி போன்ற அனுபவம் இருந்தால் கூடுதல் மதிப்பீடு வழங்கப்படும்.
வயது வரம்பு (01.07.2025 ):
குறைந்தபட்சம்: 18 வயது
பொதுப்பிரிவு: அதிகபட்சம் 32 வயது
SC/ST பிரிவுகள்: அதிகபட்சம் 37 வயது
சம்பளம்:
மாத ஊதியம் ரூ.15,700 முதல் ரூ.58,100 வரை வழங்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்துத் தேர்வு
திறன்திறன் தேர்வு (Skill Test)
விண்ணப்ப கட்டணம்:
பொது பிரிவுக்கு ₹500
இட ஒதுக்கீட்டிற்குள் உள்ளவர்களுக்கு கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் தேதி:
தொடக்கம்: 06.04.2025
கடைசி தேதி: 05.05.2025
ஆன்லைன் விண்ணப்ப முகவரி: https://www.mhc.tn.gov.in/recruitment


