வணிகம்
பிர்லாவின் அந்த கம்பெனியை ரூ.3,498 கோடிக்கு வாங்கிய ஐடிசி!

ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் லிமிடெட் (ABREL) தனது செஞ்சுரி பல்ப் & பேப்பர் (Century Pulp & Paper) நிறுவனத்தை ரூ.3,498 கோடிக்கு ITC நிறுவனத்திற்குத் விற்பனை செய்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு மதிப்பை அதிகரிக்கும் ஒப்பந்தம்!
ஆதித்யா பிர்லா ரியல் எஸ்டேட் லிமிடெட் தனது அறிக்கையில் இந்த விற்பனை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளது.
🔹 வணிக மாற்று ஒப்பந்தத்தின் கீழ் (Business Transfer Agreement) லால்குவான், உத்தராகண்ட் பகுதியில் உள்ள பல்ப் & பேப்பர் தொழில் ஒருமொத்த தொகையாக ITC-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதித்யா பிர்லா குழுமம் (Aditya Birla Group) தனது ரியல் எஸ்டேட் துறையில் கவனம் செலுத்த, ITC தனது பேப்பர் மற்றும் அச்சு தொழில்துறையை விரிவுபடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.


