கட்டுரைகள்
தன்னை தோற்கடித்தவரையே ஜெயிக்க வைத்தவர்… நா.த.கவின் ஓட்டை காலி செய்த பெரியார்… ஈரோடு கிழக்கு .-ஒரு சுவாரசியமான அலசல்…

ஈரோடு கிழக்கில், அமைச்சர் முத்துசாமியையே தோற்கடித்தவர் இன்றைய எம் எல் ஏ திரு.சந்திரகுமார். 2011 ல், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்து தொகுதியைப் பெற்றதில் இது சாத்தியமானது. ஆனால் முத்துசாமியே தோற்பார் என்பதை கலைஞர் நிச்சயம் எதிர்பார்த்திருக்க வில்லை..
தோற்றதன் ஒரே காரணம் அன்று திமுக மீது கட்டமைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் பொய்கள் & அவதூறுகள். இன்றும் அதே போல் எத்தனையோ பொய்கள் அவதுாறுகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தாலும் இப்போது அப்படி இல்லை.
சரி. இப்ப Data Analysis பார்ப்போம்.
1.) 2011 ல் தேமுதிக வி.சி.சந்திரகுமார் வாங்கிய வாக்கு 69166, திமுக முத்துசாமி வாங்கியது 58572. வாக்கு வித்தியாசம் = 10594
2.) 2016 ல்தான், தேமுதிக – ம ந கூவுடன் இணைந்ததை வெறுத்து, சந்திரகுமார் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி திமுகவுக்கு வந்தார். அதே தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் தோற்றார். அதிமுக = 64879 திமுக = 57085 வித்தியாசம் = 7794.
3.) 2021. திமுக மிக பலமான கூட்டணி பலத்துடன் இருந்தாலும், அதிமுக + பீஜேபீ + தேமுதிக + பாமக என்று எதிரிலும் பலமானக் கூட்டணியே அமைந்தது. இம்முறை தொகுதி காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டது.
காங்கிரஸ் = 67300 அதிமுக = 58396 நாதக = 11629 வித்தியாசம் = 8904
4.) 2023 ஈரோடு கிழக்கு சந்தித்த முதல் இடைத்தேர்தல். இடைத்தேர்தல் பரப்புரை அரசன் செந்தில்பாலாஜி தலைமையில் படையை இறக்கினார் ஸ்டாலின். வேட்பாளர் இளங்கோவன். செந்தில் பாலாஜி இதில் பெற்றுத் தந்த அபார வெற்றியே அவருக்கு வில்லனானது. காங்கிரஸ் = 110156 அதிமுக = 43923 நா த க = 10827 வித்தியாசம் = 66233
5.) 2025 இன்று ? மீண்டும் திமுக கைவசம் வந்தது தொகுதி. திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக ஆசைப்பட்ட சந்திரகுமாருக்கு நேரம் கனிந்தது. திமுக = 114939 நாதக = 23810 வித்தியாசம் = 90629.
பதிவான வாக்குகளில் 75% வாக்குகளை திமுக பெற்றிருக்கிறது. தன்னை தோற்கடித்தவரையே ஜெயிக்க வைத்த பெருமை ம்ணின் மைந்தர் முத்துச்சாமியையே சாரும்.
இடைத்தேர்தல்தான். ஆளுங்கட்சிக்குத்தான் அதிக வாய்ப்பு. பணம் விளையாடியிருக்கலாம். பரிசுப்பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம், அதிகாரவர்க்கம் முழுக்க ஒருகட்சி சார்பாக இறக்கப்பட்டிருக்கலாம். ஆனால், திமுக மீது கசப்புகள் கூடியுள்ளன, சட்ட ஒழுங்கு கவலையளிக்கிறது, பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை … இத்யாதி, இத்யாதி என்று ஹேட்டர்கள் தொடர்ந்து பரப்பியதை புறக்கணித்து ஸ்டாலின் & உதயநிதி மீதான பொதுமக்கள் அபிமானம் மிகப் பெரியது. 1971 ல் கலைஞர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நிகரானது. எனவே புரளிகளை அவசர அவசரமாக நம்பித் தொலைக்காதீர்கள். அந்தப் புரளியை உங்களுக்குச் சொல்பவர்களெல்லாம் எச்.ராஜா, அண்ணாமலை, எடப்பாடி, ஜெயக்குமார், சீமான், அவர்களோடு சேர்ந்து நீங்களும் தொடர்ந்து ஏமாற வேண்டாம் !!!
அதிமுக + பாஜக + பாமக + தேமுதிக + தமாகா அனைத்தும் கூட்டணி போட்டு… இன்றைய ஈரோடு (கி) இடைத்தேர்தலில் போட்டி இட்டு இருந்தால்… ஜெயித்திருப்பார்கள் என்று ஒரு கூட்டம் கதறிக் கொண்டிருக்கிறது… NDA வேட்பாளர்… மொத்தமாக எத்தனை ஓட்டுகள் பெற்று இருப்பார்..?
வாருங்கள் சகோ… ஒரு லாஜிக்கான கணக்கீடு செய்வோம்.
பெரியாரை திட்டித்தீர்த்து பிரச்சாரம் செய்த… 7% ஓட்டுவங்கி கொண்ட நாதகவுக்கு… சங்கிகளின் 9% ஓட்டுகள் இம்முறை கூடுதலாக கிடைத்துள்ளன. அந்த 9% சங்கிகள்… திமுக அல்லாத பிற அனைத்து கட்சிகளின் சங்கிகளும் தங்களின் வேட்பாளர் களத்தில் இல்லாத காரணத்தால்… நாதகவின் பெரியார் வெறுப்புப் பிரச்சாரம் பிடித்துப்போய் நாதகவுக்கு போட்ட ஓட்டுகள் என்று கொள்ளலாம். அதே நேரம்…
திமுக கூட்டணிக்கும், சங்கியல்லாத மக்களின் 9% ஓட்டுகள் இம்முறை கூடுதலாக கிடைத்துள்ளன.
அந்த 9% மக்கள்… திமுக அல்லாத பிற அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களும்… தங்களின் வேட்பாளர் களத்தில் இல்லாத காரணத்தால்… நாதகவின் பெரியார் வெறுப்புப் பிரச்சாரம் பிடிக்காமல், திமுகவுக்கு போட்ட ஓட்டுகள் என்று கொள்ளலாம்.
அடுத்து…. தம் கட்சி வேட்பாளர் போட்டியிடவில்லை என்பதால்… இம்முறை NOTA-க்கு போட்டோர்… 3.4% ஓட்டுகள். (NOTA சென்ற முறை 0.5 % இம்முறை 3.9%) இன்னும்… தம் கட்சி வேட்பாளர் போட்டியில்லை என்பதால்… இம்முறை சுயேட்சைகளுக்கு போட்டோர்… 3% ஓட்டுகள். (சுயேட்சைகள் சென்ற முறை 3% தான். ஆனால், இம்முறை 6%) மேலும்… தம் கட்சி வேட்பாளர் போட்டியிடவில்லை என்பதால் ஓட்டுப்போடவே வராமல் வீட்டுக்குள் இருந்து விட்டோர்… சுமார் 15,900 பேர். அதாவது 10% ஓட்டுகள்.
ஆக மொத்தத்தில்… நாதக பெற்ற கூடுதல் 9.2% + திமுக பெற்ற கூடுதல் 9.4% + NOTA பெற்ற கூடுதல் 3.4% + சுயேs பெற்ற கூடுதல் 3 %.+ ஓட்டுப்போட வராதோர் 10% = எதிர்க்கட்சிக் கூட்டணி 35 % (அதிமுக+பாஜக+பாமக+தேமுதிக+தமாகா)
ஆதலால்… என் முடிவுரை என்னவென்றால்… 2021 சட்டமன்றத்தேர்தலில்… . NDA வேட்பாளர் பெற்ற ஓட்டுகளான… 38.4% ஓட்டுகளை விட… இம்முறை… 3.4% ஓட்டுகள் (நம்கணக்கில்) குறைந்துள்ளது.
இதுதான்… திமுக வுக்கு கிடைத்த ஒரிஜினல் ப்ளஸ்…! அதாவது… 2021ன் 44.3 + இன்றைய 3.4 = 47.7% + மநீம 😊
குறிப்பு :- பதிவான மொத்த செல்லுபடியாகும் ஓட்டுகளில் ஆறில் ஒரு பங்கிற்கு (16.7%) மேல் பெறத் தவறிய எந்தவொரு வேட்பாளரும் தனது டெபாசிட் தொகையை இழக்க நேரிடும். ஏழரை சதவீதம் ஓட்டுவங்கி கொண்ட நாதக இம்முறையாவது டெபாசிட் பெறும் என்ற எதிர்பார்ப்பு… இம்முறையும் பொய்த்துப் போனற்கு காரணம்… சீமானின் பெரியார் மீதான அவதூறுகள். அண்ணாமலையை நம்பி களமிறங்கிய சீமானை அண்ணாமலை காலை வாரிவிட்டார். ஈழம் குறித்து சீமானின் அணைத்து பொய் புரட்டுகளும் வெளிச்சத்திற்கு வந்தது மட்டுமல்லாமல் ஈழப் போராளிகறும் விடுதலைப்புலி இயக்கமும் அவரை கைவிட்டதே சீமானின் தோல்விக்கு முக்கிய காரணம். மீண்டும் 2026 தேர்தலில் சீமான் 234 தொகுதிகளிலும் புதிய வேட்பாளர்களை நிறுத்தி ஏழையாக்குவார்.
பெரியாரை இன்றைய தலைமுறைக்கு நினைவு படுத்தி வருவதற்காக நன்றி….
ஆம். நாதக வேட்பாளரின் டெபாசிட்டை காலி பண்ணியவர்…
#தந்தை_பெரியார். 😊👍👌💐

















