ஆரோக்கியம்
அதிகாலையில் கனவு காணும் 4 முக்கிய கனவுகள்: பண மழை வரும்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
கனவு சாஸ்திரம் எனப்படும் ஜோதிட சாஸ்திரம், நாம் தூங்கும் போது வரும் கனவுகளுக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்று கூறுகிறது. அவை நமது நிகழ்கால வாழ்க்கையுடன் அல்லது எதிர்காலத்தில் நிகழக் கூடிய விஷயங்களுடன் தொடர்புடையதாக இருக்கும். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் காணப்படும் சில கனவுகள், நமக்கு பண வரவு அதிகரித்து அதிர்ஷ்டம் பெருகும் என்பதை சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
கனவு காணும் நேரம்:
- மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை காணும் கனவுகள்: 1 வருடத்தில் பலன்கள்.
- இரவு 8.30 மணி முதல் 11 மணி வரை: 3 மாதங்களில் பலன்கள்.
- இரவு 11 மணி முதல் 1.30 வரை: 1 மாதத்தில் பலன்கள்.
- 1.30 AM முதல் 3.30 AM வரை: 10 நாட்களில் பலன்கள்.
- 3.30 AM முதல் 6 AM வரை: உடனடியாக பலன்கள்.
பிரம்ம முகூர்த்த கனவுகள்: பிரம்ம முகூர்த்த நேரத்தில் காணப்படும் கனவுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை எனக்கருதப்படுகின்றன. இந்த நேரத்தில் காணப்படும் சில குறிப்பிட்ட கனவுகள், பண வரவு மற்றும் செல்வம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
பணக்காரர் ஆக்கும் கனவுகள்:
- நிறை குடம்
பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீர் நிரம்பிய குடம் அல்லது கலசம் அல்லது பூர்ணகும்பம் கண்டால் அது பணம் தேடி வரும் மிகச் சுப கனவு ஆகும். இது பொருளாதாரத்தில் வெற்றி, நன்மைகள், மற்றும் சுப செய்திகள் தரும். - நதிகளில் நீராடுவது
பிரம்ம முகூர்த்த நேரத்தில் நதியில் நீராடும் கனவு, பெரிய லாபம் மற்றும் பண வரவு அடைய உதவும். நீங்கள் மற்றவர்களிடமிருந்து செலவிடும் பணம் மீண்டும் உங்களிடம் வருவதாக அர்த்தம். - தானிய குவியல்
தானியங்கள் குவிந்து இருப்பதை கண்டால், அது அளவில்லாத பணம் உங்களைக் குவிக்கும் என்று அர்த்தம். நீங்கள் எதிர்பாராத வகையில் பெரும் லாபத்தை பெறுவீர்கள். - நேர்காணல்
பிரம்ம முகூர்த்த நேரத்தில், இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டுவிடுவதை போன்ற கனவு காண்பது, வேலை மற்றும் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வை தரும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை… பணவரவும் வெற்றியும் குவியும்! – 15 மே 2026

இன்றைய ராசிபலன் – 12 மே 2026, செவ்வாய்க்கிழமை

இன்றைய ராசிபலன் – 11 மே 2026 (திங்கட்கிழமை)

இன்று யாருக்கு அதிர்ஷ்ட மழை? யாருக்கு சோதனை? – 10 மே 2026 ராசிபலன்!

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

இன்றைய ராசிபலன் – 08 மே 2026, வெள்ளிக்கிழமை

















