சிறு தொழில்
சூப்பர் மார்க்கெட்டுகள் உருவான கதை தெரியுமா?… ஜிஎஸ்டி இல்லாமல் பொருள்கள் வாங்க முடியுமா?…

பல வகையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைத்தால் அது தான் அங்காடி. இந்த அங்காடி என்பது அல்லங்காடி, நாளங்காடி, உள்ளுர் அங்காடி, பல்பொருள் அங்காடி என பல வகைப்படும். இந்த பல்பொருள் அங்காடி தான் இன்று சூப்பர் மார்க்கெட் என்று அழைக்கப்படுகிறது.
முதலில் சந்தை கடைகளாக இருந்து, பின்னர் மளிகை கடை என்றும் ஜெனரல் ஸ்டோர் என்றும் வளர்ந்து பின்னர் பல்பொருள் அங்காடி என்று பரிணாம வளர்ச்சி பெற்று இன்று ஆன்லைன் மார்க்கெட் என்ற புதிய வளர்ச்சி யும் பெற்றிருக்கிறது.
முதன்முதலில் 1916ம் ஆண்டு அமெரிக்காவின் டென்னஸே மாகாணத்தில் மெம்பிஸ் நகரில் சவுண்டர்ஸ் என்பவர்தான் பல்வேறு வகையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் சூப்பர் மார்க்கெட் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அந்த கடையே பொருட்கள் வாங்க வருபவரே தேவையானவற்றை எடுத்துக் கொள்ளும் வகையில் செல்ஃப் சர்வீஸ் கடையாக தொடங்கப்பட்ட முதல் கடையாகும்.. சூப்பர் மார்க்கெட் என்றாலெ முதலில் நமக்கு நினைவுக்கு வருவது அங்கு வைக்கப்பட்டுள்ள நகரும் டிராலி அல்லது கையில் எடுத்துச் செல்லும் கூடைதான். இந்த கூடை பழக்கம் முதலில் 1930களில்தான் தொடங்கப்பட்டது. பின்னர் 1946ல் நகரும் டிராலிகள் கொண்டு பொருள்களை வாங்கும் பழக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
சூப்பர் மார்க்கெட் தொழிலை மிகப்பெரும் பணம் கொழிக்கும் தொழிலாக மாற்றியவர் சாம் வால்டன். இவர் 1962ல் ஆர்க்கென்சாஸ் நகரில் தொடங்கிய வால்-மார்ட் தான் இன்றைய நவீன கால சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முன்னோடியாக இருந்தது. மிகக் குறைந்த விலையில் அணைத்துப் பொருள்களும் நல்ல தரத்துடன் ஒரே இடத்தில் நமது வசிப்பிடத்திற்கு அருகாமையில் கிடைக்கும் விதமாக இன்று சூப்பர் மார்க்கெட் பல புதிய வடிவங்களை எடுத்துள்ளது. ஆனால் நவீன பொருளாதார வளர்ச்சியின் பயனாகவும் அரசின் ஜிஎஸ்டி என்ற வரிவிதிப்பின் காரணமாகவும் நுகர்வோர் இப்போதெல்லாம் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு கூடுதல் பணம் செலவழித்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.
சந்தைகளிலும் நமது தெரு முனைக் கடைகளிலும் நாம் பொருள்கள் வாங்கியபோது ஜிஎஸ்டி கிடையாது. நம் கையில் கிடைக்கும் காசிற்கு தேவையான பொருள்களை எளிதாக பெற முடிந்தது.. ஆனால் இப்போது வாங்கும் பொருள்களின் மதிப்பில் கிட்டத்தட்ட பாதி தொகை ஜிஎஸ்டி வரியாக செலுத்தி விழி பிதுங்கி நிற்கிறார்கள் ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும்.
இன்றும் பல்வேறு கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் நடக்கக் கூடிய வார சந்தை கடைகளில் ஜிஎஸ்டி இல்லாமல் தரமான பொருள்களை வாங்க முடிகிறது. ஆனால் இதற்கும் ஆப்பு வைக்க நமது அரசாங்கம் பல்வேறு யோசனைகளை செய்து வருகிறது.
என்ன நடக்கப் போகிறதோ?… பொறுத்திருந்து பார்ப்போம்….

















