Connect with us

செய்திகள்

சிந்துவெளி எழுத்து புதிரை விடுவிக்கும் ஆய்வாளர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு – முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

Published

on

சென்னை: தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளி நாகரிக நூற்றாண்டு கருத்தரங்கு இன்று சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், சிந்துவெளிப் பண்பாட்டை உலகறியச் செய்த முன்னாள் இந்தியத் தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹீபர்ட் மார்ஷலின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், “சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முன்பட்டது என்று ஜான் மார்ஷல் குறிப்பிட்டார். அண்ணா சிந்துவெளி அடையாளங்களை வெளிக்கொண்டு வந்தார். செம்மொழி மாநாட்டில் கருணாநிதி சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியத்துவத்தை உலகுக்கு எடுத்துரைத்தார்,” என தெரிவித்தார்.

மேலும், “சிந்துவெளி எழுத்து புதிரை திறமையாகப் புரிந்து விளக்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு அளிக்கப்படும். இத்துடன், கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் இரண்டு முக்கிய அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்,” என்றார்.

அதுமட்டுமல்லாமல், தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனின் பெயரில் ஆய்வு இருக்கை உருவாக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இந்த அறிவிப்புகள் தமிழ் கலாச்சார வரலாற்றைத் திறம்பட ஆராய்வதற்கும் உலக அளவில் இதன் மதிப்பை உயர்த்துவதற்கும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

 

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 29.10.2026

Uncategorized13 மணி நேரங்கள் ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

Translate »
Let trusted websites link to yours automatically, so your site appears higher in google search results — and gets mentioned in ai chats like chatgpt..