ஆரோக்கியம்
நாற்பது வயதுக்குப் பிறகு தவிர்க்க வேண்டிய 5 பழக்கங்கள் – நிபுணர் எச்சரிக்கை!

“வாழ்க்கை நாற்பதில் தான் ஆரம்பிக்கிறது” என்று நாம் பெரும்பாலும் கேட்கிறோம். ஆனால் அதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியுடனும் அனுபவிக்க, சில பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அமெரிக்க இதய நிபுணர் டாக்டர் எவன் லெவின், 40 வயதுக்குள் வாழ்க்கையில் இருந்து நீக்க வேண்டிய 5 பழக்கங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இவை உங்கள் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் பாதுகாக்கும் என அவர் கூறுகிறார்.
🚭 1. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்
புகைபிடிப்பது உடலின் பெரும்பாலான உறுப்புகளை பாதித்து புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. சிகரெட் புகையின் நச்சுப் பொருட்கள் 10 வினாடிகளில் மூளை மற்றும் இதயத்தை சென்றடைகின்றன. எனவே, நாற்பதுக்கு முன்னரே புகைபிடிப்பதை முற்றிலும் கைவிட வேண்டும்.
🍷 2. மது அருந்துவதை தவிர்க்குங்கள்
மது உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது கல்லீரல் நோய், இதய பிரச்சினைகள், செரிமான கோளாறுகள், புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது. தினசரி ஒரு டிரிங்கை விட அதிகமாக குடிப்பது மிகவும் ஆபத்தானது.
🌿 3. போதைப் பொருள்களை விலக்குங்கள்
மாரிஜுவானா போன்ற போதைப் பொருட்கள் நினைவாற்றலைக் குறைத்து, வயதான பின் டிமென்ஷியா போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.
🏃♂️ 4. அதிக உடற்பயிற்சிகளை தவிர்க்குங்கள்
நீண்ட தூர ஓடுதல், கடினமான ஜிம் பயிற்சிகள் போன்றவை வயது கூடும் போது முழங்கால், இடுப்பு, மூட்டு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, யோகா மற்றும் மிதமான பயிற்சிகளை தேர்வு செய்யுங்கள்.
🍔 5. ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் ஜங்க் ஃபுட் சாப்பிடாதீர்கள்
அதிக சர்க்கரை, எண்ணெய் நிறைந்த உணவுகள் நீண்ட ஆயுளுக்கு தடையாக இருக்கும். 40 வயதிற்கு பிறகு ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் உணவுகளை குறைத்தால், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ முடியும்.















