தமிழ்நாடு
இன்று புதிதாக 28 ஆயிரம் பேருக்கு கொரோனா: தொற்றின் பிடியில் தமிழகம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகள்படி, தமிழகத்தில் 28,897 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல இன்று மட்டும் 23,515 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து உள்ளனர்.

அதிர்ச்சியளிக்கும் வகையில் இன்று ஒரே நாளில் 236 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். தற்போது வரை தமிழகத்தில் 1,44,547 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இதில் பெரும்பான்மையானோர் மருத்துவமனைகளிலும், ஒரு தரப்பினர் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகைச்சை எடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் நாளையில் இருந்து கடும் கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இரண்டு வாரம் போடப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவு மூலம் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

















