Connect with us

மாத பலன்

2019 மார்ச் மாதம் உங்கள் ராசி எப்படி இருக்கும்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளும் மேஷ ராசியினரே, இந்த மாதம் புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு மனதிருப்தியடைவீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். புத்தி தெளிவு ஏற்படும்.

குடும்பத்தில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். குதூகலம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். தொல்லைகள் நீங்கும்.

தொழில் வியாபாரம் வழக்கம்போல் நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

பெண்களுக்கு பணவரத்து கூடும். ஏற்கனவே செய்த ஒரு காரியத்தின் பலன் இப்போது கிடைக்கும். திடீர் மனவருத்தம் ஏற்படலாம்.

கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. உடல் சோர்வு உண்டாகலாம். வீண் அலைச்சலை தவிர்த்து எடுத்து கொண்ட காரியங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற அதிக ஈடுபாட்டுடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம்.

அசுபதி:

இந்த மாதம் கணவர் மற்றும் புத்திரவழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள். வேலைப்பளு குறையும்.

பரணி:

இந்த மாதம் பெண்கள் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக அமைவதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் சேரும்.

கார்த்திகை – 1:

இந்த மாதம் கடன்கள் அனைத்தும் குறையும். இன்று புதிய பொருட்சேர்க்கைகளும் உண்டாகும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். உத்தியோகம் செய்பவர்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

பரிகாரம்: முருகனை வணங்க குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை தீரும். காரியவெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

************************************************************************************

.ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

உறவினர்களிடத்தில் பக்குவமாக நடந்து கொள்ளும் ரிஷப ராசியினரே, இந்த மாதம் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

குடும்பத்தில் ஏதாவது வீண் விவகாரங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். பிள்ளைகளுக்காக கூடுதலாக பாடுபட வேண்டி இருக்கும். சகோதரர்களிடம் கவனமாக பேசுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாக நிதிநிலை உயரும். கடன் பிரச்சனைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகும்.

உத்தியோகம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகமான எதிர்ப்புகள் விலகும்.

பெண்களுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை.. தொழில் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.

மாணவர்களுக்கு மனதில் இருந்த வீண் பயம் அகலும். கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள்.

கார்த்திகை – 2, 3, 4:

இந்த மாதம் உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். எதிர்பார்த்த கௌரவப் பதவிகள்கூட கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக அமையும்.

ரோகினி:

இந்த மாதம் வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கொடுக்கல்வாங்கலிலும் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.

மிருகசீரிஷம் – 1, 2:

இந்த மாதம் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். உற்றார்உறவினர்களின் வருகை கடந்தகால பிரச்சினைகளை மறந்து ஒற்றுமையை நிலைநாட்டும்.

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனநிம்மதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22

******************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

உற்சாகத்துடன் வேலையை செய்யும் மிதுன ராசியினரே, இந்த மாதம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிக்கும் சூழ்நிலை உண்டாகும். . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளுக்காக சில பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அவர்களை அன்புடன் நடத்துவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் மூலம் இருந்த மன வருத்தம் நீங்கி அவர்களுடன் சந்தோஷமாக வெளியே சென்று வருவீர்கள்.

தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். பணவரத்து சீராக இருக்கும். ஆர்டர்கள் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. போட்டிகள் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடம் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பெண்களுக்கு எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.

கலைத்துறையினருக்கு யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. மனக்கவலை உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எடுத்துக் கொண்ட வேலைகளில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

மிருகசீரிஷம் – 3, 4:

இந்த மாதம் சுபகாரியங்கள் யாவும் கைகூடும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப்பெறும். நல்ல நண்பர்களால் சாதகமான பலனை அடைவீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.

திருவாதிரை:

இந்த மாதம் பல பொதுநலக் காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்பும் அதனால் பொருளாதார உயர்வுகளும் உண்டாகும். ஆன்மிக,தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் அமையும்.

புனர்பூசம் – 1, 2, 3:

இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கணவன்மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வீடு, மனை, வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகமும், அசையா சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர துன்பங்கள் விலகி இன்பங்கள் தேடி வரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 3, 4, 30, 31

அதிர்ஷ்ட தினங்கள்: 23, 24

*******************************************************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

புதிய பதவிகளைப் பெறத் துடிக்கும் கடக ராசியினரே, இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். . வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் வரும் வருமானம் குறையலாம்.

குடும்பத்தில் இருந்த இறுக்கமான நிலை மாறும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரம் தொடர்பானவழக்கு விவகாரங்களை தள்ளி போடுவது நல்லது. எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் பணத்தேவை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். திறமை வெளிப்படும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங் களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். தொழிலில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அரசியல்துறையினருக்கு வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். வெற்றிபெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். பெரியோரின் ஆலோசனை படி செயல்படுவது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுவீர்கள்.

புனர்பூசம் – 4:

இந்த மாதம் புதிய பொருட்சேர்க்கையும், ஆடை ஆபரணமும் சேரும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். உடல்நலத்தில் சற்று கவனம் எடுத்துக்கொண்டால் தேவையற்ற மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க முடியும்.

பூசம்:

இந்த மாதம் புதிய தொழில் தொடங்கவும், பெரிய முதலீடுகளில் விரிவு செய்யவும் ஏதுவான காலமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திருப்தியுடன் செயல்படுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கப்பெறும்.

ஆயில்யம்:

இந்த மாதம் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப்பெறுவதால் குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்ச்சியடைவார்கள். கொடுக்கல்வாங்கல் லாபம் தரும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெயர், புகழ் உயரக்கூடிய காலமாக அமையும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று 11 முறை வலம் வந்து வணங்கி வர குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாள் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 5, 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26, 27

***********************************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

முக்கிய நபர்களின் ஆதரவைப் பெறும் சிம்ம ராசி அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறிச் செல்வீர்கள்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நல பாதிப்பு ஏற்படலாம். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். பயணங்கள் செல்ல நேரிடலாம். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். கடன்களை அடைப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் ஏற்படலாம்.

பெண்களுக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக் கவலை நீங்கி நிம்மதி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது.

அரசியல்துறையினருக்கு எல்லா நன்மைகளும் உண்டாகும். மன துயரம் நீங்கும். சிற்றின்ப செலவு அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

மகம்:

இந்த மாதம் பணம் பலவழிகளில் தேடிவந்து சேரும். மனதில் தைரியமும் துணிவும் உண்டாகி எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்த மருத்துவச்செலவுகள் குறையும்.

பூரம்:

இந்த மாதம் உற்றார்உறவினர்களிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். கணவன்மனைவி உறவில் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால் அனுசரித்துச்செல்வது நல்லது. திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். புத்திரவழியில் பூரிப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

உத்திரம் – 1:

இந்த மாதம் கடன்கள் பைசலாகும். கூட்டுத்தொழிலில் அபரிதமான லாபத்தை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்று பணியில் திருப்தியானநிலை ஏற்படும்.

பரிகாரம்: அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்குச் சென்று ஞாயிற்றுக்கிழமையில் வில்வ அர்ச்சனை செய்து வணங்க எல்லா தொல்லைகளும் நீங்கும். எதிர்பார்த்த காரியம் நன்றாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29

************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

எதிர்பார்த்த லாபத்தைப் பெறும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். . பணவரவு மன திருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள்

குடும்பத்தில் பணவரத்து அதிகப்படும். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தையுடன் அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் வரவேண்டிய லாபம் தாமதப்படும். வீண் அலைச்சல் ஏற்படலாம். நீண்ட தூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும். செலவை குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். முயற்சிகள் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம்.

பெண்களுக்கு கூடுதலாக செய்யும் முயற்சிகள் மூலம் விரும்பியபடி காரியத்தை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு இருந்த பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது.

அரசியல்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலிடத்திடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. வீண் அலைச்சல், தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

மாணவர்கள் மற்றவர்களுடன் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு விலகும். விருப்பங்கள் கைகூடும்.

உத்திரம் – 2, 3, 4:

இந்த மாதம் செல்வம், செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள் திறம்பட செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் அடைவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சலைக் குறைத்துக்கொள்ள முடியும்.

ஹஸ்தம்:

இந்த மாதம் எதிலும் சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும் என்றாலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது.

சித்திரை – 1, 2:

இந்த மாதம் தேவையின்றி பிறர் விஷயத்தில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமுடன் நடந்து கொண்டால் நற்பலனை அடையமுடியும்.

பரிகாரம்: புதன்கிழமையில் அருகில் இருக்கும் காவல்தெய்வத்தை வணங்க மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 3, 4, 30, 31

******************************************************

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

புதிய நபர்களின் நட்பைப் பெறப் போகும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் டென்ஷன் நீங்கும் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். நண்பர்களால் தேவையான உதவி கிடைக்கும்.

குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு செயல்பட வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள், நண்பர்கள் மூலம் கிடைக்கும் உதவி தாமதப்படும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெற கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதியபதவிகள் கிடைக்கும். மரியாதை அந்தஸ்து ஆகியவை உயரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மேல் அதிகாரிகள் திருப்தியடைவார்கள்

பெண்களுக்கு எந்த தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். மனதில் மகிழ்சி உண்டாகும்.

கலைத்துறையினருக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்துறையினருக்கு ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். மனதில் இருந்த கவலை நீங்கும்.

சித்திரை – 3, 4:

இந்த மாதம் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சற்றுத் தள்ளிவைப்பது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கவும்.

ஸ்வாதி:

இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வது, கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்துச்செல்வது போன்றவற்றால் அபிவிருத்தி பெருகும்.

விசாகம் – 1, 2, 3:

இந்த மாதம் எதிர்பாராத திடீர்தனவரவுகள் கிடைக்கப்பெறுவதால் மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்த நிலையே நிலவும். உடல்நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சிறிதளவு மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணம் உண்டாகும்.

பரிகாரம்: கோபூஜை செய்து பசுவை வணங்க குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14,

அதிர்ஷ்ட தினங்கள்: 5, 6, 7

****************************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

இறுக்கமான மனநிலையில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, இந்த மாதம் மனதில் புதிய உற்சாகம் உண்டாகும். மனதில் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

குடும்பத்தில் சாதகமான பலன்கள் உண்டாகும். மற்றவர்கள் பாராட்டக் கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். கெட்ட கனவுகள் தோன்றலாம். நட்பாக இருந்தவர்கள் பிரிந்து செல்லலாம். தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். திடீர் உடல்நலக்கோளாறு ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு நல் ஆதரவு உண்டாகும். நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். கவலை வேண்டாம். சக பணியாளர்கள் உங்கள் வேலையை பங்கு போட்டு செய்வார்கள்.

பெண்களுக்கு மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மையை தரும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வாக்கு வன்மையால் எல்லா நன்மைகளும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு மனதிருப்தியை தரும். புதிய நபர்களின் அறிமுகம் அவர்களது நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும்.

அரசியல்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் பெற்றோருக்கு திருப்தியை தரும்.

விசாகம் – 4:

இந்த மாதம் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் நிலவினாலும் செலவுகள் கட்டுக்கடங்கி இருப்பதால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். கடன் பிரச்சினைகளும் அதிகளவில் இருக்காது.

அனுஷம்:

இந்த மாதம் திருமண சுபகாரிய முயற்சிகளில் பல இடையூறுகளுக்குப்பின் வெற்றி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டுத் தொழிலில் சற்று கவனம் தேவை.

கேட்டை:

இந்த மாதம் பயணங்களால் அனுகூலமற்ற பலன்கள் ஏற்பட்டாலும் சிலரின் நட்புகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். கணவன்மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: ஆறுமுகனை வணங்க எதிர்ப்புகள் நீங்கும். கஷ்டங்கள் குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

****************************************************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

அக்கம் பக்கத்தில் கவனமாக பழகக் கூடிய தனுசு ராசியினரே, இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நன்மை தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படும்.

குடும்பத்தில் மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி புரியும் இடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குறிப்பாக எந்திரங்களை இயக்கும் போது கவனம் தேவை. மேலிடத்தின் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களில் தாமதம் ஏற்படலாம்.

பெண்களுக்கு எதையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பயணங்கள் வெற்றியை தரும்.

கலைத்துறையினருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பயணங்களின் போது கவனம் தேவை.

அரசியல்துறையினருக்கு எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மன கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

மூலம்:

இந்த மாதம் விநாயகர், அம்மன் வழிபாடுகள் நன்மையைத்தரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் இடமாற்றங்களும் தாமதமாகத்தான் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் முழுஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி உண்டாகும்.

பூராடம்:

இந்த மாதம் எதிர்பாராத பணவரவுகள் திடீரென்று கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் யாவும் குறையும். வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும்.

உத்திராடம் – 1:

இந்த மாதம் பூர்வீக சொத்துகளாலும் லாபம் அமையும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கக்கூடிய யோகமும் அதற்கு அரசுவழியில் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமைகளில் வணங்க எல்லா கஷ்டங் களும் நீங்கி சுகம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18

அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12

*******************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எதிர்பார்த்த உதவிகளைப் பெறப் போகும் மகர ராசியினரே, இந்த மாதம் காரிய அனுகூலம் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வீண் பகை ஏற்படலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க, பட்ட சிரமங்கள் குறையும். வேலைப் பளு குறைந்து காணப்படுவார்கள். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும்.

அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். நிதி நிலைமை சீர்படும்.

மாணவர்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கல்வியில் வெற்றிபெற கூடுதல் கவனம் தேவை.

உத்திராடம் – 2, 3, 4:

இந்த மாதம் கணவன்மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்உறவினர்களால் சாதகமான பலன்களும் மங்களகரமான சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்புகளும் உண்டாகும்.

திருவோணம்:

இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நற்பலனைத்தரும்.

அவிட்டம் – 1, 2:

இந்த மாதம் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகளால் வேலைப்பளுவும் குறையும். போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். தொழிலில் மிகவும் மந்தமான நிலைகள் நிலவுவதால் லாபம் குறைந்து பொருள்தேக்கம் ஏற்படும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வியாழக்கிழமையில் வெற்றிலை மாலை போட்டு வணங்க எடுத்த காரியத்தில் வெற்றி உண்டாகும். மனதில் தைரியம் கூடும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 19, 20

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

************************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம்)

கடன்களை அடைக்கத் துடிக்கும் கும்ப ராசியினரே, இந்த மாதம் செலவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கூடுதல் கவனம் தேவை.

குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் கூடும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். முக்கிய நபர்களின் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையுடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.

பெண்களுக்கு திறமை வெளிப்படும். காரியங்கள் அனுகூலமாக நடக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும்.

அரசியல்துறையினருக்கு இருந்த இறுக்கமான நிலை மாறும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பண விஷயத்தில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்ல பலன் தரும்.

அவிட்டம் – 3, 4:

இந்த மாதம் கூட்டாளிகளிடையே ஒற்றுமையற்ற நிலையே நிலவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணியில் பிறர்செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளும் உண்டாகும்.

ஸதயம்:

இந்த மாதம் வேலைப்பளு அதிகரிக்கும். உடல் அசதி, சோர்வு போன்றவற்றால் எந்தவொரு காரியத்தையும் சரிவர செய்துமுடிக்க முடியாமல் மனநிம்மதி குறையும்.

பூரட்டாதி – 1, 2, 3:

இந்த மாதம் கணவன்மனையியிடையே உண்டாகக் கூடிய வாக்குவாதங்களால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. கடன்கள் அதிகரிக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்

சந்திராஷ்டம தினங்கள்: 21, 22

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

******************************************************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

நண்பர்கள் மூலம் உதவிகளைப் பெறப் போகும் மீன ராசியினரே, இந்த மாதம் வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். விரும்பியது கிடைக்கும். அதே நேரத்தில் அதற்கான கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும்.

குடும்பத்தில் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. . உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். மனகுழப்பம் நீங்கும். பணவரத்து அதிகப்படும்.

தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமிது. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு விடா முயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரத்து திருப்திதரும்.

கலைத்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு மற்றவர்கள் பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வதில்லை உயரும்.

அரசியல்துறையினருக்கு வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது நடவடிக்கைகள் மேலிடத்திற்கு திருப்தியை தரும். உடல் ஆரோக்கியம் பெறும். கடன் பிரச்சனை தீரும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றிக்கு கூடுதல் முயற்சி பலன் அளிக்கும்.

பூரட்டாதி – 4:

இந்த மாதம் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிவரும். பணவரவுகள் சுமாராக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும்.

உத்திரட்டாதி:

இந்த மாதம் தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அனுகூலத்தையும் அடையமுடியும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகமும் புதிய நவீன பொருட்சேர்க்கைகளும் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

ரேவதி:

இந்த மாதம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்கசமயத்தில் அமைந்து அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புக்கள் மேலும் உங்களின் உயர்வுகளுக்கு சாதகமாக அமையும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்

சந்திராஷ்டம தினங்கள்: 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

***********************************************************************************

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்19 minutes ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்22 minutes ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்24 minutes ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்26 minutes ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்29 minutes ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

ஆன்மீகம்31 minutes ago

தமிழ்மாத பஞ்சாங்கம் மே 2026: அமாவாசை, பௌர்ணமி, முகூர்த்த நாட்கள் முழு விவரம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்36 minutes ago

மாத ராசிபலன் மே 2026: 12 ராசிகளுக்கும் தொழில், பணம், குடும்பத்தில் என்ன பலன்?

ஆன்மீகம்38 minutes ago

தமிழ்பஞ்சாங்கம் 01.05.2026: இன்று துவாதசி திதி.. சித்த யோகத்தில் செய்ய ஏற்ற காரியங்கள் என்ன?

ஆன்மீகம்41 minutes ago

இன்றைய ராசிபலன் 01.05.2026: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

ஆன்மீகம்7 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Uncategorized7 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

பச்சைப் பப்பாளியின் அற்புத நன்மைகள்: செரிமானம் முதல் எடை குறைப்பு வரை பல பலன்கள்!

Translate »
De bedste action oplevelse tilbud i dag. Vitour. aaa mush love faq.