Connect with us

மாத பலன்

உங்கள் ராசிக்கான நவம்பர் 2021 மாத ராசிபலன்கள்!

Published

on

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

 

கிரகநிலை:

தன ஸ்தானத்தில் ராஹூ – களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – அஷ்டம ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – தொழில் ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எத்தனை துன்பங்கள் வந்தாலும் தனது தன்னம்பிக்கையினால் வெற்றி பெறும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரம் பல வகையிலும் நற்பலன்களை அள்ளித் தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும்.  மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். எதிலும் கவனமாக பேசுவது நல்லது. ஆனாலும் குருவால் மனம் அமைதி பெறும். 

 

குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. கெட்டகனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  தாமதப்படலாம். 

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

 

பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 

 

கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

 

அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

 

மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

 

உடல்நிலையைப் பொறுத்தவரை மருத்துவ செலவு உண்டாகலாம்.  வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்.

 

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 1, 27, 28

****************************************************************************************************************************

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:

ராசியில் ராஹூ – ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – களத்திர ஸ்தானத்தில் கேது – அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் – பாக்கிய ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எந்த கடினமான சூழ்நிலையையும் தனது சாதுர்யமான பேச்சால் சமாளிக்கும் ரிஷப ராசியினரே  இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் காரிய தடை ஏற்படலாம். மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். 

 

குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான  பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே  நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சந்தோஷம் உண்டாகும்.  

 

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள். 

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

 

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். காரிய தடைகள் நீங்கும். மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம்  உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். 

 

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. 

 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

 

உடல்நிலையைப் பொறுத்தவரை இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். மறைவிடங்கள் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். சோம்பல் அதிகமாகலாம்.

 

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு மொச்சை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். 

 

சந்திராஷ்டம தினங்கள்: 8, 9

அதிர்ஷ்ட தினங்கள்: 2, 3, 29, 30

****************************************************************************************************************************

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

கிரகநிலை:

பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – ரண் ருண ரோக ஸ்தானத்தில் கேது – களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் – அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி – அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

தனது நிதானமான போக்கினால் அனைத்து சூழ்நிலைகளையும் சமாளிக்கும் வித்தை அறிந்த மிதுன ராசியினரே இந்த மாதம் ராசிநாதன் புதனின் சஞ்சாரத்தால் தேவையான உதவிகள் கிடைக்கும்.  பணவரத்து அதிகரிக்கும். உழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் வீண் செலவு உண்டாகும்.

 

குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

 

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும்.  உங்கள் வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வீர்கள்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து உங்களுக்கு பொறுப்புகளை அதிகரிக்கலாம். பணி நிமித்தமாக வெளியூர் சென்று தங்க வேண்டி வரலாம். 

 

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. சேமிப்புகள் செய்யும் முன் தகுந்த ஆலோசனை பெறவும். 

 

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். 

 

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. 

 

மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள். 

 

உடல்நலனைப் பொறுத்தவரை செவ்வாய் ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் ரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். நடைப்பயிற்சி செய்வது நன்மையைத் தரும். 

 

பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 10, 11, 12

அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5

****************************************************************************************************************************

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – பஞ்சம ஸ்தானத்தில் கேது – ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் – களத்திர ஸ்தானத்தில் குரு, சனி – லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

தனது பாசமான நடவடிக்கைகளால் அனைவரையும் அரவனைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே  இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். எல்லா நன்மைகளும் உண்டாகும். பயணம் மூலம் நன்மை கிடைக்கும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும். பணவரத்து அதிகரிக்கும். புத்தி சாதூரியம் கூடும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

 

குடும்பத்தில் சந்தோஷமான  சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  மகிழ்ச்சி நீடிக்கும் உறவு பலப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். அவர்களது கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.  வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.

 

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். வியாபார நிமித்தமாக  பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  திறமையான  பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன  யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன்  பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும்.

 

பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். பிள்ளைகளுடன்  அனுசரித்துச் செல்வது நல்லது. 

 

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான  முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. 

 

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

 

உடல்நலனைப் பொறுத்தவரை நீர் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். 

 

பரிகாரம்: அபிராமி அந்தாதி துதி பாடி அம்மனை வணங்கி வர குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

****************************************************************************************************************************

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – சுக ஸ்தானத்தில் கேது – பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் – ரண் ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி – தொழில் ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

எதையும்  தாங்கும் இதயம் என்பதுக்கேற்றார் போல் எதைக் கண்டும் கலங்காமல் எதிர்த்து நிற்கும் இயல்புடைய சிம்ம ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் மனக் கவலை நீங்கும். பணவரத்து இருக்கும். முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். இடம் விட்டு வெளியில் தங்க நேரிடும். 

 

குடும்பத்தில் கலகலப்பு அதிகரிக்கும். வெறுப்பு கோபம் அகலும். கணவன், மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள்  சொல்வதை  கேட்டு நிதானமாக பேசுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

 

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை  சந்திக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கடுமையான பேச்சை தவிர்ப்பது நல்லது.  லாபம் எதிர்பார்த்ததை விட குறையலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு  ஏற்படும். 

 

பெண்களுக்கு எந்த முயற்சியிலும்  சாதகமான  பலன் கிடைப்பதில் தாமதமாகும். மனகவலை ஏற்படலாம்.

 

கலைத்துறையினருக்கு வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. மிக நன்மையான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சக கலைஞர்களிடம் அனுசரித்து போவது நன்மைதரும். 

 

அரசியலில் உள்ளவர்களுக்கு வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

 

மாணவர்களுக்கு  கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

 

உடல்நலனைப் பொறுத்தமட்டில் உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

 

பரிகாரம்:  அருகில் இருக்கும் சிவன் ஆலயத்திற்கு சென்று வணங்கி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனோ பலம் கூடும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 15, 16

அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

****************************************************************************************************************************

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

கிரகநிலை:

தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது – சுக ஸ்தானத்தில் சுக்ரன் – பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி – பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் தடங்கல்கள் அகலும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியும். வீண் வாக்குவாதங்களை நீங்கும். எந்த காரியத்திலும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

 

குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். 

 

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. 

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். 

 

பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும். 

 

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

 

அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். 

 

உடல்நலனைப் பொறுத்தவரை காய்ச்சல் ஏற்படலாம். தண்ணீரைக் காய்ச்சி அருந்துவது நன்மையைத் தரும். 

 

பரிகாரம்:  ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும். 

 

சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19

அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11, 12

****************************************************************************************************************************

துலாம் (சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், சூரியன் – தன ஸ்தானத்தில் கேது – தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன் – சுக ஸ்தானத்தில் குரு, சனி – அஷ்டம ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

நீதிக்கு முன் அனைவரும் சமம் என்பதற்கேற்ப ஒரு பக்கம் சாதகமாகவும், மறு பக்கம் பாதகமாகவும் நடந்து கொள்ளாமல் ஒரே நிலையை கடைபிடிக்கும் துலா ராசி அன்பர்களே இந்த மாதம் மனதில் உறுதி பிறக்கும். எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பாலினத்தாரால் நன்மை உண்டாகும். வீண் செலவு உண்டாகும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

 

குடும்ப நிம்மதி குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் வருந்தும்படியான நிலை ஏற்படும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும். பிள்ளைகளுக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 

 

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். லாபம் குறையக்கூடும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டிவரும். புதுவியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். 

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது.  அலுவலகத்தில் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

 

பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும். செலவு அதிகாரிக்கும். பயணம் செல்ல நேரலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது.

 

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். 

 

மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும்.

 

உடல் ஆரோக்கியம் உண்டாகும். ஆனாலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிப்பது நல்லது.

 

பரிகாரம்: வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாரியம்மனை வணங்க எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14

****************************************************************************************************************************

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம்,அனுஷம், கேட்டை)

கிரகநிலை:

ராசியில் கேது – தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சனி – களத்திர ஸ்தானத்தில் ராஹூ – அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்:

ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பதற்கேற்றவாறு எதை செய்தாலும் அதில் உள்ள லாப நஷ்டங்களை கணக்கிடும் குணமுடைய விருச்சிக ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம்.  நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

 

குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். 

 

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது. கடன் கொடுக்கும்போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். 

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குறிக்கோளற்ற வீண் அலைச்சல், கூடுதல் உழைப்பும் இருக்கும். சக ஊழியர்களுடன்  சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். மேலிடத்தில்  மனம் விட்டு பேசுவது கருத்து வேற்றுமை  ஏற்படாமல் தடுக்கும். 

 

பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை. எதிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

 

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும். 

 

அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 

 

மாணவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

 

உடலநலனைப் பொறுத்தமட்டில் தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.

 

பரிகாரம்:  கந்தசஷ்டி கவசம் படித்து முருகப் பெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 22, 23, 24

அதிர்ஷ்ட தினங்கள்: 15, 16

****************************************************************************************************************************

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

கிரகநிலை:

ராசியில் சுக்ரன் – தன ஸ்தானத்தில் குரு, சனி – ரண் ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ – லாப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலவரம் உள்ளது. 

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய தனசு ராசி அன்பர்களே இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.  அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம். 

 

தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

 

பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

 

கலைத்துறையினருக்கு கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.

 

மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

 

உடல்நலனைப் பொறுத்தமட்டில் காய்ச்சல் தலைவலி ஏற்படும். மருத்துவ செலவு அதிகரிக்கும். கவனம் தேவை. 

 

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 25, 26

அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18, 19

****************************************************************************************************************************

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

கிரகநிலை:

ராசியில் குரு, சனி – பஞ்சம ஸ்தானத்தில் ராஹூ – தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – லாப ஸ்தானத்தில் கேது – அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லக்கூடிய எதிலும் பின்வாங்காத அஞ்சாநெஞ்சம் உடைய மகர ராசி அன்பர்களே இந்த மாதம் வீண் செலவுகள் குறையும். பணவரத்து அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும்.  மிகவும் வேண்டியவரை பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லது. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். 

 

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபம் தாமதப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகலாம். வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும்.  புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன்  செய்வது நல்லது.

 

குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மன வருத்தம் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தாய், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

 

பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.

 

கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

 

அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.

 

மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

 

உடல்நலனைப் பொறுத்தமட்டில் உடற்சோர்வு மன சோர்வு வரலாம்.

 

பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 1, 27, 28

அதிர்ஷ்ட தினங்கள்: 20, 21

****************************************************************************************************************************

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

கிரகநிலை:

சுக ஸ்தானத்தில் ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – தொழில் ஸ்தானத்தில் கேது – பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் – அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

வேதனையையும் சாதனையாக மாற்ற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துன்பத்தையும், இன்பமாக மாற்றும் வல்லமை பெற்ற கும்பராசியினரே இந்த மாதம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும். குறிக்கோளற்ற பயணங்கள் உண்டாகும். விழிப்புடன் இருப்பது நல்லது. சுப செலவுகள் உண்டாகும். கையிருப்பு கரையும். ஆன்மீக யாத்திரைகள் சென்று வருவீர்கள். 

 

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். 

 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்லலாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது நல்லது. வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். 

 

குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம்  கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். 

 

பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். 

 

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டி வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும். 

 

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும்.

 

மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.

 

உடல்நலனைப் பொறுத்தமட்டில் ஜலதோஷ தொந்தரவு ஏற்படலாம். தலையில் நீ கோர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும். 

 

பரிகாரம்: பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 29, 30

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23, 24

****************************************************************************************************************************

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

கிரகநிலை:

தைரிய வீரிய ஸ்தானத்தில் ராஹூ – அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் – பாக்கிய ஸ்தானத்தில் கேது – தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் – லாப ஸ்தானத்தில் குரு, சனி என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றம்:

13-11-2021 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

17-11-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல மற்றவர்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தான் செல்வது தான் சரி என்று உறுதியாக கூறும் மீன ராசிஅன்பர்களே இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். மனோதிடம் அதிகரிக்கும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

 

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும். அரசாங்கத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

 

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப்பளு குறையும். திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பயனற்ற பயணங்கள் உண்டாகலாம்.

 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி திருப்தியடைவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.  விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

 

பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செய லாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

 

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. 

 

அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. 

 

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

 

உடல்நலனைப் பொறுத்தவரை பசியின்மை ஏற்படலாம். 

 

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.

 

சந்திராஷ்டம தினங்கள்: 4, 5

அதிர்ஷ்ட தினங்கள்: 25, 26

***************************************************************************************************************************

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Carl auer kids verlag. Loading live gold market intelligence. Distributeurs automatiques et marchandises générales.