Connect with us

தமிழ்நாடு

தேர்தலில் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா: 15 கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தின் தீர்மானங்கள்!

Published

on

தமிழகத்தில் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் நடைபெறக்கூடிய மிதமிஞ்சிய பணப்பட்டுவாடாக்களை தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையங்களை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA அவர்கள், தலைமையில் இன்று (17.03.2022) வியாழன் கிழமை சென்னை – குவாலிட்டி இன் (சபரி) ஹோட்டலில் நடைபெற்றtஹு.

இந்த அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சமாஜ்வாடி கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தேசிய மக்கள் கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் , இந்து மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி, தமிழ்நாடு நாடார் பேரவை, தமிழ் தன்னுரிமை இயக்கம் ஆகிய 15 கட்சிகள் கலந்து கொண்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

ஜனநாயகம் என்பது ஒவ்வொரு தனி மனிதருடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமையோடு சுருங்கி விடுவதில்லை. அது தங்களுக்கான ஒரு அரசை தாங்களே சுதந்திரமாக தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் உள்ளடக்கியதே. எவ்விதமான வெளித்தூண்டுதல்களுக்கும் ஆளாகாமல் வாக்குரிமை பெறப்பட்ட அனைவரும் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தங்களுடைய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதே உலகெங்கும் ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து தேசங்களிலும் கடைப்பிடிக்கக் கூடிய நடைமுறையாகும்.

எங்கிருந்தோ வந்தவர்கள் நம்மை அடக்கி ஆண்ட நிலைகளை மாற்றி, நம்மை நாமே ஆண்டுகொள்வதற்காக, ஏறக்குறைய 200 ஆண்டுகாலம் போராட்டம் நடத்தியே அந்த வாக்குரிமைச் சுதந்திரத்தைப் பெற்றோம். அதற்காக நாம் அதிக விலை கொடுத்து இருக்கிறோம். பலரது உயிர்த் தியாகங்களால் போராடிப் பெற்ற அந்த வாக்குரிமையை அண்மைக்காலமாக தமிழகத்தில் காசு, பணம், பரிசுப் பொருட்கள் என ஆசை வார்த்தைகள் காட்டி அபகரிக்கும் ஆபத்தான போக்குகள் அதிகரித்துவிட்டன.

மக்களிடம் கொள்கை-கோட்பாடுகளை எடுத்துச் சொல்லி வாக்குகளைப் பெற்று மக்களுக்கு பணியாற்றும் இடத்திற்கு வர முடியும் என்ற நிலைகளைகளை எல்லாம் அடியோடு அழித்தொழித்து கோடி கோடியாகப் பணத்தை வாரி இரைக்கக்கூடியவர்களே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற சூழலும், வாக்காளர்களுக்கு பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும் கொடுத்து அவர்களை ஊழல் படுத்தி, அவர்களது மனங்களை மாற்றி வாக்குகளை பெறும் அவல நிலையும் உருவாகியிருக்கிறது.

இடைத்தேர்தல்களில் ஒளிந்தும் மறைந்தும் மூலைமுடுக்குகளில் வாக்குக்கு பணம் கொடுக்க தொடங்கிய அத்தொற்று இப்பொழுது நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெரும் தொற்றாகப் பரவி இருக்கிறது. வாக்காளர்களே விரும்பாவிட்டாலும் அவர்களுடைய கைகளிலும், பைகளிலும் வலிந்து காசுபணங்களை, பரிசுப் பொருட்களைத் திணித்து அவர்களுடைய மனங்களை மாற்றியதால், இப்பொழுது வாக்காளர்களே வாக்களிக்க அரசியல் கட்சிகளிடம் பணம் கேட்டு பெறும் நிலை உருவாகி இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல் என்றால் ரூபாய் 50 முதல் 100 கோடி, சட்டமன்ற தேர்தல் என்றால் ரூபாய் 25 முதல் 50 கோடி, உள்ளாட்சித் தேர்தல் என்றால் ரூபாய் 5 முதல் 10 கோடி என செலவழிக்க வாய்ப்புள்ள புதிய நிலப்பிரபுக்கள், நிலச்சுவாந்தார்கள், அரசியலால் முதலாளிகள் ஆனவர்கள் மட்டுமே தேர்தல்களில் போட்டியிட முடியும்; வெற்றி பெற முடியும் என்ற நிலைகள் உருவாகி உள்ளன. அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டுக்கு ரூபாய் 2 கோடி முதல் 10 கோடி வரையிலும் பணம், ஹாட் பாக்ஸ்கள், கொலுசுகள், டோக்கன்கள் என இன்னும் வேறு பல விதங்களிலும் வழங்கப்பட்டிருக்கின்றன. இது போன்ற முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேர்தல் ஆணையங்கள் எப்படியாவது அந்த குறிப்பிட்ட தேர்தலை நடத்தி விட வேண்டும் என்று கருதுகிறார்களே தவிர, தேர்தல்கள் ஜனநாயக ரீதியாகவும், நேர்மையாகவும், முறையாகவும் நடத்த வேண்டும் என்று நினைப்பதே இல்லை. இதைவிட ஜனநாயகத்திற்கு கேடானது, தீங்கானது வேறெதுவும் இருக்க முடியாது.

எனவே, இனி எதிர்வரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறக்கூடிய நாடாளுமன்ற, சட்டமன்ற பொதுத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்களில் மிதமிஞ்சிய பணப்பட்டுவாடா முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி ஜனநாயகத்தை மீட்டெடுக்க இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் ஆணையமும் மிக விரிவான திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நீதிமன்றம் செல்லவும்; தமிழகம், டெல்லியில் போராட்டம் நடத்தவும்; ’வாக்குகள் விற்பனைக்கு அல்ல’ என்ற கருத்தை இயக்கமாக கொண்டு செல்லவும்; பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க மே மாதம் முதல் தமிழகத்தில் முதற்கட்டமாக 100 பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?