சினிமா
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் புதிய அணி!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கதேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த சங்கத் தேர்தலுக்காக புதிய அணி ஒன்று உருவாகியுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2023 – 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் மன்னன் தலைமையில் புதிய அணியை உருவாக்கி உள்ளனர். இந்தப் புதிய திரைப்படத் தயாரிப்பாளர்களின் அணிக்கு ’உரிமைக் காக்கும் அணி’ என பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் உட்பட 300 தயாரிப்பாளர்களுக்கும் மேல் இந்த அணியில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோட்டல் கிங்ஸ் பார்க்கில் இந்த அணியின் அலுவலகம் இன்று காலை 9 மணியளவில் பூஜையுடன் துவங்கப்பட்டது. விரைவில் எந்தெந்த பொறுப்புகளுக்கு யார் யார் களமிறங்க இருக்கிறார்கள் என்று அறிவிப்போம் எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.