உலகம்
பத்தாயிரம் பெண்களின் குளியல் படங்கள்: தொக்காக சிக்கிய ரகசியமாக படம் பிடித்த கும்பல்!

ஜப்பான் நாட்டில் வெந்நீர் நீரூற்றுகளில் குளிக்கவரும் சுற்றலா பயணிகள் உட்பட பெண்களை ரகசியமாக புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளங்களுக்கு விற்பனை செய்த டாக்டர் உட்பட 17 பேர் கொண்ட ஒரு கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

#image_title
ஜப்பான் நாடு அதிக குளிர்ச்சியான நாடுகளில் ஒன்றாகும். 12.5 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பொதுமக்களில் அதிகமானவர்கள் வெந்நீர் நீரூற்றுகளை பயன்படுத்துகின்றனர். நிலத்தின் அடியில் உள்ள எரிமலைகளின் செயல்பாட்டால் இந்த வெந்நீர் நீரூற்றுகள் உருவாகின்றன. அரசு சார்பிலும் பல வெந்நீர் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜப்பானில் மிகவும் பிரபலமான இந்த வெந்நீர் நீரூற்றுகளுக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், வெந்நீர் நீரூற்றுகளில் குளிக்கும் பெண்களை சிலர் ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

#image_title
இந்த அதிரடி சோதனையில், டாக்டர் ஒருவர் உட்பட 17 பேரை அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து அவர்களிடமிருந்து 10,000 பேரின் ஆபாசமான புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தது கண்டறியபட்டது. கைது செய்யப்பட்ட டாக்டர் தனது 20 வயதிலிருந்தே பெண்கள் வெந்நீர் நீரூற்றுகளில் குளிப்பதை சீக்ரெட்டாக படம் பிடித்து வருவதாகவும், நாடு முழுவதும் உள்ள 100-க்கும் மேற்பட்ட வெந்நீர் நீரூற்றுகளில் குளித்த பெண்களில் புகைப்படங்கள் அவர்களிடம் இருப்பதாகவும் அதை பல்வேறு இணையதளங்களுக்கு விற்பனை செய்த தகவலும் வெளியாகியுள்ளது.



















